
வடமேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேற்குவங்க மாநிலம் டிகா பகுதியில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
இதன்காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், குளச்சல், ராமேஸ்வரம், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக சென்னை, எண்ணூர், திருவொற்றியூர், மாமல்லபுரம், கோவளம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக நேற்று, சென்னை உள்பட பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.