கோவை வாசிகளே உஷார்...! வந்துவிட்டது எலி காய்ச்சல்..! ஒருவர் பலி...!

By thenmozhi gFirst Published Sep 7, 2018, 11:59 AM IST
Highlights

கோவையில் எலி காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 
 

கோவையில் எலி காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

கேரளாவில் சமீபத்தில் தொடர் மழை காரணமாக,பெருத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு அடைந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களில் கேரளாவில் 11 பேரை காவு வாங்கியிருக்கிறது எலி காய்ச்சல் என்பது குறிப்பிடத்தக்கது. லெப்டோஸ்பைரோசிஸ் எனும் நோய் பொதுவாக எலி காய்ச்சல் என அறியப்படுகிறது. 

தற்போது இந்த காய்ச்சலால் கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் பலி ஆகி உள்ளார். கோவை  கிணத்துகடவு பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு வயது 29. சதீஷுக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக, கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலன்  இன்றி அவர் உயிரிழந்தார். 

இதன் காரணமாக, கோவை மாவட்ட மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் கால் நடை பராமரிப்பில் உள்ள  நபர்களுக்கும், வெள்ளம் வற்றிய இடங்களில் உள்ள நபர்களுக்கு மிக எளிதில் பாக்டீரியாவால் இந்த  காய்ச்சல் வரக்கூடிய சூழல் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர் 

இந்த நோயின் அறி குறிகள்:

காய்ச்சல், குமட்டல், தசை வலி ஏற்படுவது, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள். உறுப்புகள் செயலிழப்பு கூட ஏற்படும். 

முன்கூட்டியே  பாதுகாத்துக் கொள்வது எப்படி..? 

நோய் வரக்கூடிய பாயத்தில் உள்ளதாக கருதினால் முன்கூட்டியே, மருத்துவரை அணுகி ஆன்டிபயாடிக் மருந்தை எடுத்துக்கொள்வது நல்லது என கோவை மருத்துவ கல்லூரி டீன் தெரிவித்து உள்ளார்.

எனவே பொதுமக்களே, எலி காய்ச்சலில் இருந்து தப்பித்துக் கொள்ள, தேவைப்படுபவர்கள் முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்வது நல்லது. 

click me!