விவசாய கடன் தள்ளுபடி விவகாரம் – தமிழக அரசு மேல்முறையீடு...

 
Published : May 29, 2017, 07:45 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
விவசாய கடன் தள்ளுபடி விவகாரம் – தமிழக அரசு மேல்முறையீடு...

சுருக்கம்

Tamilnadu Govt Apieal for Agricultural loan waiver

கூட்டுறவு வங்கி மூலம் பெறப்பட்ட அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு 5 ஏக்கர் வரை வைத்திருப்போரின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால் 5 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருந்தாலும் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , சிறு,குறு என பாகுபாடு காட்டாமல் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக்கடன் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதன் மூலம் சுமார் 4 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறுவர் என அய்யாகண்ணு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கூட்டுறவு வங்கி மூலம் பெறப்பட்ட அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

அந்த மனுவில் நீதிமன்றத்திற்கு அரசின் கொள்கையில் தலையிட உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்துகள்.. காவு வாங்கப்பட்ட 9 உயிர்கள்.. அரசுக்கு அன்புமணி கடும் கண்டனம்
தமிழகத்தையே உலுக்கிய விபத்து.. அரசு பேருந்து ஓட்டுநர் மீது 4 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு!