‘நான்தான் மோடி அரசின் இலக்கு’ மனம் திறந்து குமுறும் ப.சிதம்பரம்...

 
Published : May 29, 2017, 07:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
‘நான்தான் மோடி அரசின் இலக்கு’ மனம் திறந்து குமுறும் ப.சிதம்பரம்...

சுருக்கம்

Modi Govt Target On P.Chidambaram and his Family

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதியஜனதா அரசின் இலக்கு நான்தான் என்பது தௌிவாகத் தெரிகிறது. அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தில் எனது குடும்பத்தார் ஒருவருக்கும் தொடர்பு இல்லை என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ. சோதனை

கடந்த 17ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின் மகன் கார்த்திசிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. ஐ.என்.எஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதில், அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆதாயம் பெற்றார் என சி.பி.ஐ. குற்றம்சாட்டியது. இதன் காரணமாகவே சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ விளக்கமளித்தது.

இது குறித்து ப.சிதம்பரம் நேற்று அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்-

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நான் நிதி அமைச்சராக போது,  6 செயலாளர்கள் கொண்ட அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தில் எனது குடும்பத்தினர் தலையீடு இருந்தது என்று சி.பி.ஐ. குற்றம்சாட்டுவது முட்டாள்தனமானது.

இந்த குற்றச்சாட்டு என்பது, 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செயலாளர்களை நியமித்து செயல்பட்ட அரசு, அதிகாரிகள் மீது வெறுக்கத்த வகையில் கூறும் அவதூறாகும். அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தில் உள்ள எந்த ஒரு தனி அதிகாரியும் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. 6 செயலாளர்கள் ஒன்று கூடி விவாதித்துதான் முடிவு எடுக்க முடியும்.

நான் அமைச்சராக இருந்த காலத்தில் என்னுடன் பணியாற்றியவர்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். என்னுடைய முடிவில் யாரும் தலையிட துணிச்சல் இருக்காது. நான் என்னுடைய குடும்ப உறுப்பினர் யாரையும், அரசு விவகாரங்கள் தொடர்பாக என்னுடனோ, அதிகாரிகளுடனோ, எனது அமைச்சக அதிகாரிகளுடனோ பேசுவதற்கு ஒருபோதும் அனுமதித்து இல்லை.

சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு நான்தான் இலக்கு என்றுஅதுதௌிவாகத் தெரிகிறது. ஆனால், எப்.ஐ.ஆரில் எனது பெயர் குறிப்பிடவில்லை.

அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் வழக்குகளை பொருத்தமட்டில், அந்த வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில்தான் நான் அனுமதி கொடுத்தேன். அந்த வாரியத்தில் 5 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், வௌியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த ஐ.எப்.எஸ். அதிகாரியும் பணியாற்றுவார்கள்.

ஒவ்வொருவரும் நீண்டகால அனுபவமும், சிறப்பாக பணியாற்றும் திறமையானவர்கள். அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் பரிந்துரைகள் ஜூனியர் அதிகாரிகளால் ஒருமுறைக்கு இருமுறை ஆய்வு செய்யப்பட்டு, கூடுதல் செயலாளர்,  செயலாளரால் ஆய்வு செய்யப்பட்டு, அதன்பின் நிதி அமைச்சருக்கு வந்து சேரும்.

இந்த வழக்கைப் பொருத்தவரை அப்போது, முன்னாள் ஆர்.பி.ஐ. கவர்னர் டி சுப்பாராவ், அசோக் சாவ்லா(ஐ.ஏ.எஸ்.)உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இதில் பணியாற்றினார்கள்.

கடந்த இரு வாரங்களாக இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களும், சமூக ஊடகங்களும் தவறாக தகவல்களை வேண்டுமென்றே பரப்புவது வேதனையளிக்கிறது. நான் எப்.ஐ.ஆர். நகலைக் கூட சமூக ஊடகங்களில் இருந்துதான் பெற்றேன். என்னுடைய சொந்த மாநிலமாக தமிழக்கத்தில் இருந்துதான் இந்த எப்.ஐ.ஆர். நகல் கசிந்திருக்கிறது.

இந்த எப்.ஐ.ஆர்.ரில், ஊழல், லஞ்சம் பெற அரசு அதிகாரியுடன் இணைந்து சதிச்செயலில் ஈடுபடுதல் அதாவது ஒப்புதல் கொடுத்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் எந்த அரசு அதிகாரியின் பெயரும் குறிப்பிடவில்லை.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு அனுமதி வாங்கித் தர ரூ. 10 லட்சம் காசோலை பெற்றது என்்ற குற்றச்சாட்டு முட்டாள்தனமான குற்றச்சாட்டு. அவ்வாறு அந்த நிறுவனத்துக்கு காசோலை வந்து இருந்தால், அந்த நிறுவனம் இன்வாய்ஸ் கொடுத்து இருக்கும், வருவாய்க்கான கணக்கில் ஏற்றி, வருமானவரி செலுத்தி இருக்கும்.

அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் எந்த அதிகாரியையும் எனது மகன்கார்த்தி சந்திக்கவில்ைல என்பதை உறுதியாகக் கூற முடியும். ஐ.என்.எஸ். மீடியா,நியூஸ் நிறுவனத்துக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

அட்வான்டேஜ் ஸ்டிராடஜிக் கன்சல்டிங் நிறுவனத்தில் கார்த்தி இயக்குநராகவோ, பங்குதாரராகவோ இருந்தது இல்லை. இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்கார்த்தியின் நண்பர்கள் மட்டுமே.

எனது மகனும், அவரின் வர்த்தகம் தொடர்பான நண்பர்களும் மத்திய அரசால் குறிவைக்கப்படுகிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது. எப்.ஐ.ஆர். மூலமாக மிகசிறந்த அரசு உயர் அதிகாரிகள் கூட அவமானப்படுத்தப்படுவது எனக்கு கோபமடையச் செய்கிறது.

இந்த குற்றச்சாட்டு என்பது ஒரு செயலாளரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த 6 செயலாளர்களையும் அவமானப்படுத்தும் முட்டாள்தனமாக குற்றச்சாட்டு.

சென்னையில் இருந்து தவறான தகவல் பரப்பிவிடப்பட்டதால் இந்த அறிக்கையை விடுகிறேன். தேவையில்லாமல் தொந்தரவு கொடுக்கும் நபர்களை சட்டத்தின் முன்வௌிப்படுவார்கள். ஆதலால், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க எனது மகனை கேட்டுக்கொண்டுள்ளேன். அவரும் அவ்வாறே செய்வார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சீமானின் பேச்சை ரசித்து கேட்ட தொண்டரை கழுத்தை பிடித்து தள்ளிய நிர்வாகிகள்.. நாதக நிகழ்ச்சியில் பரபரப்பு..
டிடிவி, ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சு., அதிமுகவில் இருந்து பலரும் தவெக வருவார்கள்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி