இது எனது பாக்கியம்! மகா கும்பமேளாவில் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவி புனித நீராடல்!

Published : Feb 22, 2025, 04:13 PM ISTUpdated : Feb 22, 2025, 04:18 PM IST
இது எனது பாக்கியம்! மகா கும்பமேளாவில் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவி புனித நீராடல்!

சுருக்கம்

உத்தர பிரதேச மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த மகா கும்பமேளாவில் தற்போது வரை சுமார் 60 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இந்த விழா வரும் 26-ம் தேதி நிறைவடைய உள்ளது. 

இந்நிலையில், மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புனித நீராடினார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டமான மகா கும்பமேளாவில் பங்கேற்பதில் பாக்கியம் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மகாசிவராத்திரியை முன்னிட்டு கும்பமேளாவிற்கு 1200 கூடுதல் சிறப்பு பேருந்துக்கு ஏற்பாடு!

அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் புனித நீராடினார் .
இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில்: இந்தியா முழுவதிலுமிருந்து மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வந்த எண்ணற்ற  கோடிக்கணக்கான இந்துக்களுடன் சேர்ந்து, பிரயாகராஜின்  புண்ணிய தீர்த்தத்தில் திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான செழிப்புக்காகவும் பிரார்த்தனை செய்தனர். 

இதையும் படிங்க: 675 கிலோ மீட்டர் சைக்கிளிலேயே வந்து மகா கும்பமேளாவில் நீராடிய அப்பா – மகள்!

இங்கு காற்றில் பரவியுள்ள தீவிர நேர்மறை ஆற்றல் அனைவரையும் ஆழமாகத் தொட்டு, மற்றவர்களுடன் இணைக்கிறது. சுமார் 60 கோடி சனாதனிகள் ஏற்கனவே புனித நீராடிய இந்த தனித்துவமான மற்றும் பிரமாண்டமான சனாதன தர்ம விழா, மறுமலர்ச்சி பெற்ற அடைந்த ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உறுதியான சான்றாகும் என குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!