ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் இதோ

By Thanalakshmi VFirst Published Nov 5, 2022, 4:00 PM IST
Highlights

மதுரை மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பழங்குடியினர் பிரிவில் காலியாக உள்ள ஜூப் ஓட்டுனர் பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

நிறுவனம்: தமிழக அரசு 

காலி பணியிடங்கள்: 1

பணியின் பெயர்: ஜீப் ஓட்டுனர்

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையாக சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். ( ரேஷன் கார்டு, ஆதார், சாதி சான்றிதழ்,

 அனுப்ப வேண்டிய முகவரி: 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ( வளர்ச்சி பிரிவு),
மதுரை - 20

மேலும் படிக்க:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் காலி பணியிடங்கள்.. 44,000 சம்பளம்.. முழு விவரம்

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது பழங்குடியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 18- 55 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்கியினருக்கு 18 - 37 வயதுக்குள் இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பத்துடன், தகுதியான ஓட்டுனர் உரிமம் இருக்க வேண்டும். 

நிபந்தனை: 

மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் ஓட்டுநராக பணியாற்றிய அனுபம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் இதர படிகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: 

சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்படுவர். 

மேலும் படிக்க: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை.. பொறியியல் படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு..

 

click me!