தமிழக மீனவர்கள் படகுகளை விடுவிக்க முடிவு - இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தகவல்...

Asianet News Tamil  
Published : Apr 29, 2017, 04:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
தமிழக மீனவர்கள் படகுகளை விடுவிக்க முடிவு - இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தகவல்...

சுருக்கம்

tamilnadu fishermans boat will release from srilanka by magintha amaraveera

இந்திய மீனவர்களின் படகுகளை நிபந்தனை அடிப்படையில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் 133 படகுகள் இலங்கை வசம் உள்ளது. இந்த படகுகளை விடுவிக்க தமிழக முதலமைச்சர் சார்பிலும், இந்திய பிரதமர் மோடி சார்பிலும் வலுவான கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதனிடையே இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அரசு முறை சுற்றுபயணமாக இந்தியா வந்துள்ளார்.

அவரிடம் பிரதமர் மோடி தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்திய மீனவர்களின் படகுகளை நிபந்தனை அடிப்படையில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தகவல் தெரிவித்துள்ளார்.

இதில் முதற்கட்டமாக 20 படகுகளை விடுவிக்க உள்ளதாக மீனவர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

டெய்லி எதுக்கு இப்படி குடிச்சிட்டு வரீங்க கேட்ட காதல் மனைவி.. ஃபுல் மப்பில் பிரவீன்குமார் செய்த அதிர்ச்சி
தமிழகத்தில் மழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்.. வானிலை மையம் முக்கிய அப்டேட்