Tamil News Live : ஜூலை 4ம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னையில் ஜூலை 4ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

5:12 PM

அரசு மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதம் போராட்டம்.. 4 முறை அணுகியும் செவி சாய்க்காத முதல்வர்.. ராம்தாஸ் வேதனை

அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் 5 முறை கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவத்துறை அமைச்சரை 14 முறையும், செயலாளரை எண்ணற்ற முறையும் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும் படிக்க

4:49 PM

நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைவு.. திருப்பூரில் ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு..

பின்னலாடை உற்பத்திக்குத்‌ தேவையான அனைத்து ரக நூல்களின் விலை‌ கிலோவுக்கு ரூ.40 குறைந்து, நுற்பாலை சங்கம் அறிவித்துள்ளது. இதனால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆர்டர்கள்‌ அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  எனவே வட்டியில்லா கடன்‌ உள்ளிட்ட சலுகைகளை ஆகவே, சிறு, குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று  தொழில் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும் படிக்க

4:06 PM

கர்நாடக மாநிலத்தில் கோவில் திருவிழாவில் டிராக்டர் ரேஸில் 10 பேருக்கு காயம்

கர்நாடகா மாநிலத்தில் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட டிராக்டர் ரேஸில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காணொளி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

3:44 PM

திரௌபதி முர்மு பாஜவிடம் சிக்கிய சர்க்கஸ் யானை.. குடியரசு தலைவர் வேட்பாளரை விமர்சித்த திருமாவளவன்

பாஜகவில் இருக்கும் தலித்துகளான எல்.முருகனும், திரௌபதி முர்முவும் பாகன் கையில் இருக்கும் கோயில் யானைகள், ஜோசியரிடம் உள்ள கூண்டுக்கிளிகள், சர்க்கஸ் புலிகள் போன்றது தான் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2024ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு நாள் இரவில் மன்கீபாத்தில் பேசும் போது மனுஸ்ருதி தான் அரசியலமைப்பு சட்டம் என்று அறிவித்தாலும் அறிவிப்பார் என்று எச்சரித்தார். மேலும் படிக்க

2:40 PM

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை.. இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்  நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

2:22 PM

தமன்னாவை சுத்தி சுத்தி பார்த்து சர்ச்சையில் சிக்கிய ராதா ரவி

நடிகை தமன்னாவை சுற்றி சுற்றி பார்த்தேன் அவர் உடம்பில் ஒரு இடத்தில் கூட கறுப்பு இல்லை என்றும் அதேபோல் தான் கனல் பட ஹீரோயின் காவ்யாவும் இருப்பதாகவும் நடிகர் ராதா ரவி பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் படிக்க

1:46 PM

எஸ்.பி.வேலுமணி கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெண்டர் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு தடை விதிக்க கூறி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து பததிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை, அறப்போர் இயக்கத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் படிக்க

1:24 PM

வரும் ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை.. பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..

தமிழகத்தில் வரும் ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார். மேலும் பக்ரீத் பண்டிகையன்று தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறை இன்று தென்பட்டதால் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

மேலும் படிக்க
 
12:29 PM

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க போட்டா போட்டி.. ஆத்திரத்தில் நண்பனை குத்திக்கொன்ற அதிர்ச்சி சம்பவம்.!

திருச்சியில் ஒரே பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பர்களிடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

12:24 PM

சிம்புவின் பத்து தல படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது மற்றொரு படமான பத்து தல படத்தின் வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படிக்க

12:01 PM

மக்களே உஷார்!! இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு.. எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு உயர்வு..?

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. கார்களுக்கு கட்டணம் ரூ.30 யிலிருந்து ரூ.33 ஆகவும் இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ.49யிலிருந்து ரூ.54 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.11-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

11:23 AM

சர்ச்சையாகும் தற்காலிக ஆசிரியர் நியமனம்.. மொட்டை அடித்து போராட்டத்தில் ஆசிரியர்கள்..

தற்காலிக ஆசிரியர்கள்‌ நியமனத்தில்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற நபர்கள்‌ மற்றும்‌ இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்‌ என்ற விரிவான தெளிவுரைகள்‌ வழங்கப்படும்‌ வரை தற்காலிக ஆசிரியர்‌ பணியிடத்தை நிரப்பக்‌ கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.சென்னை டிபிஐ வளாகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில்‌ சிலர் நேற்று மொட்டை அடித்து போராட்டத்தில்‌ ஈடுபட்டனர்‌.

மேலும் படிக்க

11:09 AM

தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்கு இடைக்கால தடை

தமிழக அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க

10:42 AM

தங்கம் சவரனுக்கு ரூ.856 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து ரூ.38,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,785க்கு விற்பனையாகிறது. 

10:40 AM

டுவிட்டர் பக்கத்தில் தனது அதிமுக பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி

சமூக வலைதளத்தில் தனது பொறுப்பை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி மாற்றியுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு இருந்ததை தலைமை நிலைய செயலாளர் என எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார்.

9:57 AM

திமுகவிற்கு குட்பாய்? மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா தங்க தமிழ்ச்செல்வன்..?

தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள தங்க தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:54 AM

ஓபிஎஸ் வீட்டு வாசலில் குடுகுடுப்பைக்காரர்கள்.. இனி அவருக்கு நல்ல நேரம் தானாம்.. ஜக்கம்மாவே சொல்லிட்டாங்க

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வருகை தந்த குடுகுடுப்பை காரர்களை இனி அவருக்கு நல்ல காலம் தான் என கூறியுள்ளனர். 
மேலும் படிக்க

9:50 AM

சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சென்னை தி. நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது, இந்த நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சொத்து என உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதையடுத்து வருமானவரித்துறையினர் அந்த சொத்தை முடக்கி உள்ளனர். இதுவரை 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகாமான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

மேலும் படிக்க

8:57 AM

கோவை மேயர் வீட்டை அழகுபடுத்த ரூ 1 கோடியா..? அதிமுக கவுன்சிலரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

கோவை மாநகராட்சி மேயரின் வீட்டை அழகு படுத்துவதற்கு ஒரு கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

8:25 AM

ராக்கெட்ரி படத்தின் விமர்சனம்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ராக்கெட்ரி. இப்படத்தில் நடிகர் மாதவன் நாயகனாக நடித்துள்ளதோடு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியும் உள்ளார். ராக்கெட்ரி படத்தின் விமர்சனம் படிக்க...

8:04 AM

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

தமிழகத்தில் ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 
மேலும் படிக்க

7:24 AM

உதய்பூர் டெய்லர் படுகொலை.. மாற்று கருத்து, அவதூறுகளுக்கு வன்முறை தாக்குதல்கள் தீர்வு இல்லை.. சீமான்

உதய்பூரில் இருவர் செய்திட்ட கோரக்கொலையைக் கொண்டு, ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முனையும் அரசியல் லாபக்கணக்கீடுகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:06 AM

கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா.. மீண்டும் பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம்.!

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்ததையடுத்து பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:04 AM

40வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

சென்னையில் 40வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

7:03 AM

வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் தொடர்ந்து உயர்ந்து வந்த விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைந்து ரூ.2,186க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க

5:12 PM IST:

அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் 5 முறை கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவத்துறை அமைச்சரை 14 முறையும், செயலாளரை எண்ணற்ற முறையும் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும் படிக்க

4:49 PM IST:

பின்னலாடை உற்பத்திக்குத்‌ தேவையான அனைத்து ரக நூல்களின் விலை‌ கிலோவுக்கு ரூ.40 குறைந்து, நுற்பாலை சங்கம் அறிவித்துள்ளது. இதனால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆர்டர்கள்‌ அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  எனவே வட்டியில்லா கடன்‌ உள்ளிட்ட சலுகைகளை ஆகவே, சிறு, குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று  தொழில் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும் படிக்க

4:06 PM IST:

கர்நாடகா மாநிலத்தில் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட டிராக்டர் ரேஸில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காணொளி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

3:44 PM IST:

பாஜகவில் இருக்கும் தலித்துகளான எல்.முருகனும், திரௌபதி முர்முவும் பாகன் கையில் இருக்கும் கோயில் யானைகள், ஜோசியரிடம் உள்ள கூண்டுக்கிளிகள், சர்க்கஸ் புலிகள் போன்றது தான் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2024ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு நாள் இரவில் மன்கீபாத்தில் பேசும் போது மனுஸ்ருதி தான் அரசியலமைப்பு சட்டம் என்று அறிவித்தாலும் அறிவிப்பார் என்று எச்சரித்தார். மேலும் படிக்க

2:40 PM IST:

தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்  நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

2:22 PM IST:

நடிகை தமன்னாவை சுற்றி சுற்றி பார்த்தேன் அவர் உடம்பில் ஒரு இடத்தில் கூட கறுப்பு இல்லை என்றும் அதேபோல் தான் கனல் பட ஹீரோயின் காவ்யாவும் இருப்பதாகவும் நடிகர் ராதா ரவி பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் படிக்க

3:18 PM IST:

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெண்டர் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு தடை விதிக்க கூறி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து பததிலளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை, அறப்போர் இயக்கத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் படிக்க

1:24 PM IST:

தமிழகத்தில் வரும் ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார். மேலும் பக்ரீத் பண்டிகையன்று தமிழக அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜில் ஹாஜி பிறை இன்று தென்பட்டதால் ஜூலை 10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

மேலும் படிக்க
 
12:29 PM IST:

திருச்சியில் ஒரே பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நண்பர்களிடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

12:24 PM IST:

சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது மற்றொரு படமான பத்து தல படத்தின் வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படிக்க

12:01 PM IST:

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. கார்களுக்கு கட்டணம் ரூ.30 யிலிருந்து ரூ.33 ஆகவும் இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ.49யிலிருந்து ரூ.54 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.11-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

11:23 AM IST:

தற்காலிக ஆசிரியர்கள்‌ நியமனத்தில்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற நபர்கள்‌ மற்றும்‌ இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்‌ என்ற விரிவான தெளிவுரைகள்‌ வழங்கப்படும்‌ வரை தற்காலிக ஆசிரியர்‌ பணியிடத்தை நிரப்பக்‌ கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.சென்னை டிபிஐ வளாகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில்‌ சிலர் நேற்று மொட்டை அடித்து போராட்டத்தில்‌ ஈடுபட்டனர்‌.

மேலும் படிக்க

1:24 PM IST:

தமிழக அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க

10:42 AM IST:

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து ரூ.38,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,785க்கு விற்பனையாகிறது. 

10:40 AM IST:

சமூக வலைதளத்தில் தனது பொறுப்பை மாற்றிய எடப்பாடி பழனிச்சாமி மாற்றியுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு இருந்ததை தலைமை நிலைய செயலாளர் என எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார்.

9:57 AM IST:

தேனி மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள தங்க தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

9:54 AM IST:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வருகை தந்த குடுகுடுப்பை காரர்களை இனி அவருக்கு நல்ல காலம் தான் என கூறியுள்ளனர். 
மேலும் படிக்க

11:05 AM IST:

சென்னை தி. நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது, இந்த நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சொத்து என உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதையடுத்து வருமானவரித்துறையினர் அந்த சொத்தை முடக்கி உள்ளனர். இதுவரை 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகாமான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

மேலும் படிக்க

8:57 AM IST:

கோவை மாநகராட்சி மேயரின் வீட்டை அழகு படுத்துவதற்கு ஒரு கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

8:25 AM IST:

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ராக்கெட்ரி. இப்படத்தில் நடிகர் மாதவன் நாயகனாக நடித்துள்ளதோடு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியும் உள்ளார். ராக்கெட்ரி படத்தின் விமர்சனம் படிக்க...

8:04 AM IST:

தமிழகத்தில் ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 
மேலும் படிக்க

7:24 AM IST:

உதய்பூரில் இருவர் செய்திட்ட கோரக்கொலையைக் கொண்டு, ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முனையும் அரசியல் லாபக்கணக்கீடுகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:06 AM IST:

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்ததையடுத்து பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க

7:04 AM IST:

சென்னையில் 40வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

8:09 AM IST: