பெண் சாமியார் அன்னபூரணி பற்றிய தகவல்கள் கடந்த ஒரு வாரமாகவே பரபரப்பாக வெளியாகி கொண்டு இருக்கின்றன. அன்னபூரணி அரசு அம்மா பற்றி தற்போது பல ‘அடேங்கப்பா’ அப்டேட்ஸ் கிடைத்து இருக்கிறது.
தமிழகத்தில் திடுதிப்பென ஒரு பரபரப்பு பெண் சுனாமி எழும். தாறுமாறாக சுழன்றடிக்கும் அது. சில நேரங்களில் சமூகத்தின் முக்கிய மனிதர்களையும் இழுத்துப் போட்டு கடும் சேதாரத்தை உருவாக்கும். ஆனால் சில பரபரப்பு பெண்களோ சின்ன வைபரேஷனை உருவாக்கிவிட்டு அப்படியே ஆற்றில் கரைந்த ஆவின் பால் போல் காணாமல் போய்விடுவார்கள். சிவகாசி ஜெயலட்சுமி, மதுரை ஷெரீனா, அருப்புக்கோட்டை நிர்மலா, டெல்டா ஜீவஜோதி, என்று எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.
undefined
சிலர் அரசியல் ரீதியில் பிரளயங்களை உருவாக்குவார்கள். சிலரோ க்ரைம் ஸ்டோரிகளின் கதாநாயகியாவார்கள். ஆனால் அதிரிபுதிரியாக ஆன்மிக பெண் சுனாமிகளும் உருவாவதுண்டு. அப்படித்தான் கிளம்பியிருக்கிறார் அன்னபூரணி. இன்றைக்கு ‘டாக் ஆஃப் தி தமிழ்நாடு’ ஆகியிருக்கும் அன்னபூரணியின் அட்ரா சக்க அப்டேட்ஸ் இதோ….
அன்னபூரணியின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த, கடைக்குட்டி பொண்ணு. இவரது கணவர் பெயர் சங்கரநாராயணன். ஆனால் அவருக்கு இவர் ரெண்டாவது மனைவியாம். சங்கரநாராயணனின் வேலைக்காக சென்னைக்கு மாறி வந்த நிலையில், குடியிருந்த பகுதியில் அன்னபூரணிக்கு சகஜமாக சில ஆண் நண்பர்கள் உருவாகினர். இதனால் அந்த வீட்டுப் பெண்கள் புகார் கிளப்பினராம்.
இவர்களின் எதிர்வீட்டுக்கு இண்டீரியர் வேலை பார்க்க வந்தவர்தான் அரசு. அவரோடு பழகி, நெருக்கமாகி பின் ஓவர் நெருக்கமாகியிருக்கின்றனர் இருவரும். அதாவது வீட்டுக்குள்ளே ஹக்கிங், கிஸ்ஸிங் என்கிற அளவுக்கு நெருக்கமாம். இது அரசுவுக்கு தெரிந்து, கன்னாபின்னா பிரச்சனையாகி இருக்கிறது.
அரசுவும், அன்னபூரணியும் தனிமையில் இருந்த வீடியோ ஒன்று இரண்டு வீடுகளுக்கும் அனுப்ப்பட்டதாம். அதை எடுத்தது யார் ? என்பதே அரசின் நெடுநாளைய கேள்வி. உறவினர்களின் பஞ்சாயத்துக்குப் பின் இருவரும் பிரிந்துவிட்டனர். அது அரசுவுக்கு செம்ம வசதியாகிப் போனதால் அன்னபூரணியை சென்னையிலுள்ள பட்டாபிராம் பகுதியில் தங்க வைத்திருக்கிறார்.
அங்கே சில பிரச்னைகள் உருவாகின அன்னபூரணியால். அதன் பின் திருமுல்லைவாயல்… .என்று இவர்களின் பயணம் சென்னை சிட்டிக்குள் பல இடங்களுக்கு நகர்ந்திருக்கிறது. தன்னிடம் பேசுபவர்களை எளிதாக ஈர்க்க கூடிய பேச்சுத் திறமை, வல்லமை ஆகியவை அன்னபூரணியின் தனித்திறமை. இதைத்தான் வகையாக பயன்படுத்தியுள்ளார் அரசு.
‘இயற்கை ஒளி’ எனும் அறக்கட்டளையை துவக்கி, அதன் மூலம் ஆன்மிக பயிற்சி வகுப்பு நடத்துகிறேன், மன ஆறுதல் அளிக்கிறேன், குறைகளை தீர்க்கிறேன்! என்று சொல்லி வகையாக கல்லா கட்ட துவங்கியிருக்கின்றனர். அதன் பின் அரசுவே அவரை பங்காரு மகன் செந்தில்குமாரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன் பின் அந்த வட்டாரத்தில் முக்கிய முகமானார் அன்னபூரணி. அந்த வகையில் செந்தில் கிழித்த கோடுகளுக்குள் வாழ்ந்திருக்கிறார். அங்கே பிரச்னையானதும் அன்னபூரணியை கேர் டேக் பண்ணியவர்தா ரோகித். இவர், பூரணியின் புகழ் பாடும் வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் அப்லோடு செய்து புண்ணியங்களை வாங்கிக் கட்டிக் கொண்டவர்… என இப்படியாக நீள்கிறது இந்த திடீர் ‘அன்னபூரணியின்’ அசர வைக்கும் அப்டேட்ஸ்.