
ரக்ஷாபந்தன் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெண்கள் பயண செலவைக் குறைக்கும் நோக்கில், ஆந்திரா மற்றும் ஹரியானா அரசுகள் இனி இலவச பேருந்து பயண திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இது மாநில குடும்பங்களின் செலவுகளை குறைக்கும் வகையிலும், பேருந்துகள் மீது மக்களிடையே நம்பிக்கையை உருவாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில், ஆகஸ்ட் 8 மாலை 12 மணி முதல் ஆகஸ்ட் 9 இரவு 12 மணி வரை, அனைத்து பெண்களுக்கும் மாநில பேருந்துகளில் இலவச பயணம் வழங்கப்படுகிறது. டெல்லி மற்றும் சண்டிகர் வரை செல்லும் பஸ்களிலும் இது பொருந்தும். இதேபோல், ஆந்திர அரசு தனது பிரமுகமான தேர்தல் வாக்குறுதியான ‘ஸ்த்ரீ சக்தி’ திட்டம் ஆக.15 முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.1,942 கோடி செலவில் செயல்படவுள்ள இந்தத் திட்டம், மாதம் ரூ.1,000 வரை குடும்பச் செலவைச் சேமிக்கும் என அமைச்சர் பார்த்தசாரதி கூறினார். 11,449 பஸ்களில் 75% ஆகும் 8,456 பஸ்கள் இந்த திட்டத்தில் இயக்கப்படும். பல்லெவெளுகு, மெட்ரோ எக்ஸ்பிரஸ் போன்ற பல வகைகள் இதில் அடங்கும்.
இந்த இரண்டு மாநிலங்களும் தமிழக அரசு முதன்மையாக தொடங்கிய "பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை" தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தொடங்கிய இந்த திட்டம், நாடு முழுவதும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது.
இந்த வளர்ச்சி, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முதலில் செயல்படுத்திய திட்டத்துக்குப் பின் வந்த வெற்றி என்றும், இப்போது மற்ற மாநிலங்கள் இதனை பின்பற்றி வருகின்றன என்பதும் தமிழக அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமையாக இருக்கிறது என்றும் கூறலாம்.