ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு.. மாற்றம் செய்த தமிழக அரசு - அரசாணை வெளியிட்ட அமைச்சர்!

Ansgar R |  
Published : Oct 22, 2023, 08:10 PM IST
ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு.. மாற்றம் செய்த தமிழக அரசு - அரசாணை வெளியிட்ட அமைச்சர்!

சுருக்கம்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் மாற்ற ஆவணம் செய்யப்படும் என்று திமுக அரசு அறிவித்திருந்தது. 

இந்நிலையில் அதற்கான அரசனை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வெளியான அறிக்கையின் படி பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என்று அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியர்களை நேரடி நிர்ணயம் செய்வதற்கான உச்ச வயது வரம்பானது தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனை அடுத்து பொது பிரிவினருக்கு 53 வயதாகவும் இதர பிரிவினர்களுக்கு 58 வயது எனவும் நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டு அரசாணையை தற்பொழுது பிறப்பித்துள்ளது தமிழக அரசு. மனித வள மேலாண்மை துறையின் அரசாணையின்படி ஆசிரியர்களை பள்ளிகளில் நேரடியாக நியம நியமனம் செய்ய கடந்த 1.1.2023  அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, பொதுப்பிரிவினருக்கு உச்ச வயது 42 என்றும்.

அதே போல இதர பிரிவினருக்கு 47 வயதாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது, இந்நிலையில் தான் கடந்த 4.10.2023 அன்று வெளியிட்ட பட்ட அறிக்கையில், பொதுப்பிரிவினருக்கு 53 வயதாகும், இதர பிரிவினருக்கு 58 வயதாகவும் வயது வரம்பை அதிகரிக்க ஆவணம் செய்யப்பட்டு இன்று அதற்கான அரசனை வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதுமே முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துருச்சு.. எடப்பாடி பழனிசாமி.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்