திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பயிற்சி மருத்துவர் உயிரிழந்ததற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் காய்ச்சல் பாதிப்புக்காக பயிற்சி மருத்துவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார். இந்நிலையில், இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த பயிற்சி பெண் மருத்துவர் சிந்து அவர்கள் உயிரிழந்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பயிற்சி மருத்துவர் சிந்து அவர்களின் மரணத்திற்கு நிபா காய்ச்சல் தான் காரணம் என்ற செய்திகள் வருகின்றன. டெங்கு காய்ச்சல் பரவலை விரைந்து கட்டுப்படுத்தவும் நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்தவும் நான் ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்திருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட.
ஸ்கெட்ச் போடுவியா, இப்ப போடு பாப்போம்; வீரலட்சுமியிடம் ஆக்ரோஷமாக சீறிய நாம் தமிழர் கட்சியினர்
மக்கள் நலப் பிரச்சனைகளில் கவனம் கொள்ளாது மடைமாற்று அரசியல் செய்யும் இந்த அரசு மக்கள் உயிர்களோடு விளையாடாமல் இனியாவது விழித்துக் கொண்டு விரைந்து டெங்கு மற்றும் நிபா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.