Building Permission : அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டினால் இனி அவ்வளவுதான்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Published : Jul 16, 2025, 04:17 PM IST
building construction

சுருக்கம்

தமிழகத்தில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு சீல் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 2500 சதுர அடியிலிருந்து 3000 சதுர அடி வரையிலான குடியிருப்புக் கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Tamil Nadu Building Permission : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உரிய அனுமதி பெறாமல் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனை ஒழுங்குப்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால் இதை உரிய வகையில் பின்பற்றாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனையடுத்து அந்த கட்டிடங்களுக்கு சீல் வைப்பது தொடர்பாக முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. 

கட்டிடங்கள் கட்ட கட்டுப்பாடு

சுயசான்றின் அடிப்படையில். 2500 சதுர அடியிலிருந்து மனையில், 3000 சதுர அடி வரையிலான பரப்பளவுள்ள குடியிருப்புக் கட்டுமானங்களைக் கட்டிக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டிடத்தின் பரப்பளவு 10,000 சதுர அடிக்கு கீழ் உள்ள பட்சத்தில் அதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம், இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இக்கட்டிட வரைபடங்களின் ஆவணங்கள் உரிய அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கட்டிட வரைபட அனுமதி இணைய தளம் மூலம் வழங்கப்படுகிறது.

அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு நோட்டீஸ்

10,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு. தொழில் நுட்ப அனுமதி நகர் மற்றும் ஊரமைப்பு துறை மூலம் பெறப்பட்டு, இறுதி ஒப்புதல் கிராம ஊராட்சியின் நிர்வாக அலுவலரால் வழங்கப்படுகிறது. இவ்வாறு கட்டிட வரைபட அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடங்கள் என்றும், கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் என்றும் வரையறை செய்யப்படுகிறது.

1. கிராம ஊராட்சிகளின் நிர்வாக அலுவலரின் அனுமதி இன்றி கட்டுமானப் பணிமேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி சான்றினைகோரி அறிவிப்பினை வழங்க வேண்டும்.

2. அனுமதி இன்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாகக் கள ஆய்வு செய்ய வேண்டும். கள ஆய்வின் போது கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டுள்ளதா அல்லது கட்டுமான பணிமேற்கொள்ளப்பட்டுவருகிறதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

3. கட்டிட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்றும், அதிலிருந்து விதிமுறைகளை மீறி கட்டுமானங்கள் அமைந்துள்ளதா? என்றும் ஆய்வு செய்து அதற்கான முழுவிவரத்தையும் ஆய்வறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

4. கட்டுமானம் முடிவு பெற்றிருப்பின் முடிவறிக்கை உரிய தொழில்நுட்ப அலுவலரிடம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். 5. மேலும் கட்டிடம் சொத்து வரி விதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதா அல்லது விடுபட்டுள்ளதா என்பதைக் குறிப்பிட வேண்டும்.

6. கட்டிடத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் கழிவுநீர் வசதி ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

7. அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்ட கட்டிடம் தொடர்ந்து கட்டப்பட்டு கொண்டிருந்தால் அதை பூட்டி முத்திரை இடும் அதிகாரம் கிராம ஊராட்சிகளின் நிர்வாக அலுவலருக்கு உண்டு. அதை படிவம் 3 இல் சம்பந்தப்பட்ட நபருக்கு அறிவிப்பாக சார்வு செய்ய வேண்டும்.

8. கட்டிட வரைபட அனுமதி இன்றி கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களின் உரிமையாளருக்கு அளிக்கப்படும் அறிவிப்பானது உரிய அலுவலர்களால் நேரடியாக சம்பந்தப்பட்ட நபருக்கு சார்பு செய்யப்பட வேண்டும். அவ்வாறு சார்வு செய்யப்படும் போது. என்றால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த வயது அறிவிப்பினைச் சார்பு செய்யலாம். அந்த நபர் இல்லை வந்த நபரிடம் அந்த

கட்டிடங்களுக்கு சீல்

9. இவ்விரண்டு நபர்களும் இல்லை என்றால் தற்போது அந்த நபர் வசிக்கும் முகவரிக்கு பதிவு தபால் மூலம் ஒப்புகை அட்டையையும் இணைத்து அனுப்பி சார்பு செய்யலாம். அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை மேற்கொள்ளும் நபர்கள் மீது வழங்கப்பட்ட அறிவிக்கையின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எடுக்கலாம். அந்த வகையில் உரிய அறிவிக்கையின்படி கட்டுமானப்பணிகள் நிறுத்தப்படவில்லை எனில், அக்கட்டிடத்தினை பூட்டி சீல் வைக்கவும் உரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சியின் நிர்வாக அலுவலர், ஊராட்சியின் ஆய்வாளரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்
உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்