முதல் தேர்தலிலேயே அதிரடி.. தபால் வாக்குகளில் திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளிய விஜய்

Published : May 04, 2026, 08:28 AM IST
Vijay TVK

சுருக்கம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், எக்ஸிட் போல்கள் பெரும் வெற்றியை கணித்த நிலையில், தற்போது பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் முன்னிலை வகிக்கிறார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. யார் ஆட்சியை அமைப்பார்கள் என்ற கேள்வி முழுவதும் பெரும் ஆவலை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த முடிவுகளை கவனமாகக் காத்திருக்கின்றனர்.

விஜய் கட்சி: முதல் தேர்தலிலேயே அதிர்ச்சி கொடுக்குமா?

தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்த நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) இந்தத் தேர்தலில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே, முதல் தேர்விலேயே ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யத்தை கிளப்பியுள்ளது.

கருத்துக்கணிப்புகள் மாற்றிய கணிப்பு

தேர்தலுக்கு முன்பு வரை, தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்ற விமர்சனங்கள் இருந்தன. ஆனால், பின்னர் வெளியான எக்ஸிட் போல்கள் இந்த கருத்தை மாற்றின. சில முன்னணி ஊடகங்கள், குறிப்பாக இந்தியா டுடே, தமிழக வெற்றிக் கழகம் 92 முதல் 120 இடங்கள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளன. மேலும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி வெளியிட்ட சர்வேயில் 121 இடங்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

விஜயின் வியூகங்கள் மற்றும் நம்பிக்கை

கட்சியைத் தொடங்கியதிலிருந்து விஜய் தனது அணியை ஒருங்கிணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். வெற்றி பெற்ற உடன் அனைவரும் பனையூருக்கு திரும்ப வேண்டும் என்ற அவரது அறிவுறுத்தல், கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது. வேட்பாளர்களும் தாங்களே வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து வருகின்றனர்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு: ஆரம்ப முன்னிலை

தற்போதைய வாக்கு எண்ணிக்கையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் முன்னிலையில் உள்ளார். பெரம்பூரில் அவர் 75 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார், திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் 25 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார். திருச்சி கிழக்கிலும் அவர் முன்னிலை பிடித்திருப்பது, தேர்தல் முடிவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாடே உற்றுநோக்கும் தமிழக தேர்தல் முடிவுகள்: ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் இரண்டாம் வாய்ப்பு எதனால் அவசியம்?
DMK Alliance: திமுக கூட்டணி ஆட்சி அமைத்து, தமிழகத்தில் வரலாறு படைக்கும்: கிரிஷ் சோடங்கர்