வாரணாசியில் சிக்கிய தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள்! உதவிகேட்ட 30 நிமிடத்தில் ஆக்ஷனில் இறங்கிய உதயநிதி!

Published : Feb 20, 2025, 09:53 AM ISTUpdated : Feb 20, 2025, 10:08 AM IST
வாரணாசியில் சிக்கிய தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள்! உதவிகேட்ட 30 நிமிடத்தில் ஆக்ஷனில் இறங்கிய உதயநிதி!

சுருக்கம்

வாரணாசியில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கிய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு விமானம் மூலம் வீரர்களை மீட்க ஏற்பாடு செய்தார்.

உத்தரபிரசேதம் மாநிலம் வாரணாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் தென்னிந்தியா அணி சார்பில் தமிழகத்தில் இருந்து 6 வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றனர். பின்னர் நள்ளிரவு ஒரு மணியளவில் கங்கா காவேரி விரைவு ரயிலில் சென்னை திரும்புவதற்கு ஏசி பெட்டியில் முன்பதிவு செய்திருந்தனர். 

இந்நிலையில் கும்பமேளாவுக்கு சென்றவர்கள் முன்பதிவு செய்த ரயில் பெட்டியில் ஏறியதாலும், கூட்ட நெரிசல் காரணமாகவும் விளையாட்டு உபகரணங்களுடன் மாற்றுத்திறனாளி வீரர்களால் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக என்ன செய்வத என்று தெரியாமல் வாரணாசி ரயில் நிலையத்திலேயே காத்து கிடந்தனர். எந்த ரயில்களும் கிடைக்காத நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தனர். 

இதையும் படிங்க: தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணி நேரம் என்பதை பார்ப்போம்!

இந்நிலையில்ஏசி பெட்டியில் முன்பதிவு செய்தபோதும் கட்டுக்கடங்காத கும்பமேளா கூட்ட நெரிசலால் ரயிலில் ஏறக் கூட முடியவில்லை என வீடியோ வெளியிட்டு தமிழ்நாடு அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பாக  துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிக்கு தெரியவந்தது. 

இந்நிலையில் வாரணாசியில் சிக்கிய தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை தமிழகம் அழைத்துவர துணை முதலமைச்சர் உடனடியாக ஏற்பாடு செய்துள்ளார். அதாவது  விமான டிக்கெட்களுக்கு ஏற்பாடு, விமான நிலையம் செல்வதற்கும் ஏற்பாடு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வீரர்களிடம் பேசி 30 நிமிடத்தில் தீர்வு கண்டு அசத்தியுள்ளார். பெங்களூரு வழியாக வாரணாசியில் சிக்கிய தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் வருகின்றனர். பின்னர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வர விமான டிக்கெட்களும் ஏற்பாடு செய்துள்ளார். 

இதையும் படிங்க: திமுகவில் மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம்! பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

பகல் 1.30 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து இரவு 7.30 மணி விமானத்தில் சென்னை வருகை தருகின்றனர். இந்நிலையில் கோரிக்கை வைத்த 30 நிமிடங்களில் உடனடி நடவடிக்கை எடுத்து விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, எங்களுக்கு உதவி புரிந்து அனைத்து ஊடங்களுக்கும்  தமிழக வீரர்கள் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!