LIVE NOW

Tamil Nadu Budget 2025 Live: சென்னை மட்டுமல்ல! 1,125 புதிய மின்சார பேருந்துகள்! பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது!

Tamil Nadu Budget Live Update 2025: தமிழக அரசின் 2025- 2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் திமுக அரசு தாக்கல் செய்கின்ற கடைசி பட்ஜெட் இதுவாகும். எனவே இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு, மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3:40 PM

சென்னை மட்டுமல்ல! 1,125 புதிய மின்சார பேருந்துகள்! பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது!

தமிழக பட்ஜெட்டில் 3,000 புதிய பேருந்துகள் மற்றும் 1,125 மின் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிண்டி மற்றும் வண்ணாரப்பேட்டையில் பன்முகப் போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படும்.

மேலும் படிக்க

1:22 PM

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி - அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிககளில் படிக்கும் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி அவரவர் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.
 
12:24 PM

அடி தூள்.! மீண்டும் சரண் விடுப்பு சலுகை ! அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி! தமிழக பட்ஜெட்டில் அதிரடி

நிதி பற்றாக்குறையால் நிறுத்தி வைக்கப்பட்ட சரணவிடுப்பு சலுகையை மீண்டும் வழங்க அரசு ஊழியர்கள் போராடி வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, 1.4.2026 முதல் 15 நாட்கள் வரை சரண் செய்து பணமாகப் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

12:16 PM

இனி இவர்களுக்கும் ரூ.1000! தோழி விடுதிகள் குறித்து பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

Tamil Nadu Budget: 2024-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், மூன்றாம் பாலினத்தவருக்கு மாதம் ரூ.1000 உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

12:11 PM

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் திவுக் கட்டணம் 1% குறைவு

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால் பதிவுக் கட்டணம் 1% குறைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

12:02 PM

அரசு துறைகளில் உள்ள 40,000 காலிப்பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும்

அரசு துறைகளில் உள்ள 40,000 காலிப்பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 78,882 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். 

12:00 PM

பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு உதவித்தொகை

பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:59 AM

இலங்கை தமிழர்களுக்கு 3000 வீடுகள் வரும் நிதியாண்டில் கட்டப்படும்

பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் ரூ.75 கோடியில் செயல்படுத்தப்படும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு 3000 வீடுகள் வரும் நிதியாண்டில் கட்டப்படும். இந்த ஆண்டில் 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும்

11:45 AM

சென்னையில் இத்தனை இடங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களா.? பட்டஜெட் முக்கிய அறிவிப்புகள்

தமிழக பட்ஜெட்டில் குறு, சிறு தொழில் கடன் உதவி, கடற்கரை மேம்பாடு, பசுமை பேருந்துகள், மெட்ரோ விரிவாக்கம், கைவினைஞர்களுக்கு உதவி, குடிநீர் திட்டம், ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர் உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க

11:43 AM

மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள்

|| மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் | | | | | | | | pic.twitter.com/7oUGT6ydVZ

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

11:33 AM

ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா

ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும். அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்

11:32 AM

3000 புதிய பேருந்துகள் கொள்முதல்

500 கிமீ தூர வனப்பகுதி சாலைகள் 250 கோடி செலவில் மேம்படுத்தப்படும். போக்குவரத்து துறைக்கு 1031 கோடி ரூபாய் செலவில் புதியதாக 3000 பேருந்துகள் வாங்கப்படும்.

11:29 AM

மாணவியருக்கு மாணவியர் விடுதிகள்

|| மாணவியருக்கு மாணவியர் விடுதிகள் | | | | | | | | pic.twitter.com/42IuKBLKXL

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

11:28 AM

தமிழ்நாட்டில் 1,125 புதிய மின் பேருந்துகள் அறிமுகம்

தமிழ்நாட்டில் 1,125 புதிய மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை 950, மதுரை 100, கோவை 75 பேருந்துகள் அடங்கும். 

11:26 AM

டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மாற்றம்

700 டீசல் பேருந்துகள் ரூ.70 கோடி செலவில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:23 AM

இனி சென்னையில் வெள்ள பாதிப்பு வராது! தமிழக பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள், அடையாறு நதி சீரமைப்பு, மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க

11:17 AM

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு

சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு. கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு

11:08 AM

30 இடங்களில் முதலமைச்சர் படைப்பகம்

சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:06 AM

மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம்

கோவளம் அருகே சுமார் 3 அயிரம் ஏக்கர் பரப்பளவில் 350 கோடி ரூபாய் செலவில் புதிய நீர்தேக்கம் அமைக்கப்படும்.  சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க திருப்போரூரிலும் நீர்தேக்கம் அமைக்கப்படும்.

11:05 AM

சென்னைக்கு அருகில் உலக தர வசதிகளுடன் புதிய நகரம்

|| சென்னைக்கு அருகில் உலக தர வசதிகளுடன் புதிய நகரம் | | | | | | | | | pic.twitter.com/EmikDLpJqR

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:59 AM

ரமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்

ஓசூர் மற்றும் விருதுநகரி டைடல் பூங்கா அமைக்கப்படும். ஓசூர் டைடல் பூங்காவிற்கு ரூ.400 கோடி நிதி. திருச்சியில் 280 ஏக்கரில் வார்ப்பக பூங்கா அமைக்கப்படும். ரமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்

10:57 AM

7 மாவட்டங்களில் புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள்

|| 7 மாவட்டங்களில் புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் | | | | | | | | pic.twitter.com/ldQeOsDlFM

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:56 AM

10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி

10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும். கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில்  ரூ.74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு. 

10:45 AM

தமிழ்நாட்டில் செமி கண்டெக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும்

தமிழ்நாட்டில் செமி கண்டெக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும். கோவை மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழிற் பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 
 
10:44 AM

8 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.572 கோடி நிதி ஒதுக்கீடு. ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வில் பயின்று நேர்முக தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொக்கை வழங்கப்படும். 8 மாவட்டங்களில் புதியதாக கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என  அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

10:43 AM

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்று நோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்று நோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு. 14 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 
 
10:36 AM

ரூ.2,500 கோடி கல்விக்கடன்

சென்னையில் அறிவியல் மையம் அமைப்பதகு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  அடுத்த நிதியாண்டில் ரூ.2500 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு உயர்கல்வித்துறைக்கு மொத்தமாக 8 ஆயிரத்து 494 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
10:34 AM

4 மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டு பணிகள்

|| 4 மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டு பணிகள் | | | | | | | | pic.twitter.com/u1QTLYAMeb

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:31 AM

மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள்

|| மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் | | | | | | | | pic.twitter.com/IZZO3G8Xhl

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:30 AM

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி

நிதி நிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு என  46 ஆயிரத்து 767 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வு எழுதுவோருக்கு சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படுன்ம்.  சேலம், கடலூர், திருநெல்வேலியில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் புதிய நூலகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

10:29 AM

ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள்

அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும். ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்

10:28 AM

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்

|| முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் | | | | | | | | pic.twitter.com/R4KZ4f85QJ

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:27 AM

14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்

பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும். 

10:22 AM

முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்

முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்

|| முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் | | | | | | | | pic.twitter.com/R4KZ4f85QJ

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:20 AM

ரூ.10 கோடியில் மூத்த குடிமக்களுக்கான அன்புச்சோலை மையம்

மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்.

10:20 AM

ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்

ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர் இணைக்க நடவடிக்கை. சென்னை, தாம்பரத்தில் முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். 

10:18 AM

புதிதாக 10,000 மகளிர் சுய உதவி குழுக்கள்!

சுய உதவிக்குழுக்களில் இதுவரை இணைந்திடாதவர்களை இணைக்கும் வகையில் 10,000 சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். 37 ஆயிரம் கோடியில் கடனும் வழங்கப்படும் என  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

10:17 AM

ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம்

|| ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் | | | | | | | | pic.twitter.com/dF7WIQ66iN

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:16 AM

மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும்

பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும். மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது. மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

10:14 AM

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் புதியதாக விண்ணப்பிக்கலாம்.  இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். புதுமை பெண் திட்டத்திற்கு 420 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

10:12 AM

தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்

|| தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் | | | | | | | | pic.twitter.com/G8xxnMOZek

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:05 AM

உலக தமிழ் ஒலிம்பியாட் - 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை

|| உலக தமிழ் ஒலிம்பியாட் - 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை | | | | | | | | pic.twitter.com/Ko8aNbqB4U

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:03 AM

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு

9:59 AM

2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேரலை

9:57 AM

பாஜக வெளிநடப்பு

டாஸ்மாக் மூலமாக ரூ.1000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து இருப்பதாக கூறி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர். 

9:56 AM

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்

தமிழக பட்ஜெட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும். கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி  திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு. 100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்.

9:42 AM

இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது

மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு. இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது. இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர்.

9:41 AM

தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி! வெளிநடப்பு

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவை பேச விடாமல் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். 

9:39 AM

பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு

தமிழ்நாடு நாட்டின் சிறந்த இரண்டாவது பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும், சமநிலை தவறாமல் தமிழ்நாட்டை வழிநடத்துவோம் என தங்கம் தென்னரசு பேசி வருகிறார். 

9:27 AM

பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் ஆலோசனை

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

9:25 AM

தமிழ்நாடு பட்ஜெட்! முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வருகை

தமிழ்நாடு பட்ஜெட் இன்று சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட மூத்த அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்.

9:23 AM

திமுக எம்.எல்.ஏ சந்திரகுமார் சட்டப்பேரவையில் பங்கேற்க முதல்முறையாக வருகை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்  திமுக எம்.எல்.ஏ சந்திரகுமார் சட்டப்பேரவையில் பங்கேற்க முதல்முறையாக வருகை தந்துள்ளார். 

8:35 AM

அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை

தமிழ்நாடு பட்ஜெட் இன்று சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடங்களில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தி வருகிறார். 

8:04 AM

மகளிர் உரிமை தொகை உயர்கிறது? அதுமட்டுமல்ல! தமிழக பட்ஜெட்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?

Magalir Urimai Thogai: 2025-2026ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிமைத் தொகை உயர்த்தப்படுமா அல்லது திட்டம் விரிவாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் படிக்க

7:51 AM

தமிழ்நாடு பட்ஜெட் இன்று காலை 9.30 மணிக்கு தாக்கல்

2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு அரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை தொடங்க உள்ளார்.

7:48 AM

இன்று தாக்கலாகிறது தமிழ்நாடு பட்ஜெட்.. எதிர்பார்ப்புகள் என்னென்ன?

202526ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு, மகளிர் உரிமைத் தொகை எண்ணிக்கை உயர்வு, மகளிர் விடியல் பயண பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது. 

3:40 PM IST:

தமிழக பட்ஜெட்டில் 3,000 புதிய பேருந்துகள் மற்றும் 1,125 மின் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிண்டி மற்றும் வண்ணாரப்பேட்டையில் பன்முகப் போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படும்.

மேலும் படிக்க

1:22 PM IST:

தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிககளில் படிக்கும் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி அவரவர் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.
 
12:24 PM IST:

நிதி பற்றாக்குறையால் நிறுத்தி வைக்கப்பட்ட சரணவிடுப்பு சலுகையை மீண்டும் வழங்க அரசு ஊழியர்கள் போராடி வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, 1.4.2026 முதல் 15 நாட்கள் வரை சரண் செய்து பணமாகப் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

12:16 PM IST:

Tamil Nadu Budget: 2024-26 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், மூன்றாம் பாலினத்தவருக்கு மாதம் ரூ.1000 உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

12:11 PM IST:

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால் பதிவுக் கட்டணம் 1% குறைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

12:02 PM IST:

அரசு துறைகளில் உள்ள 40,000 காலிப்பணியிடங்கள் வரும் நிதியாண்டில் நிரப்பப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 78,882 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். 

3:06 PM IST:

பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:59 AM IST:

பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் ரூ.75 கோடியில் செயல்படுத்தப்படும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு 3000 வீடுகள் வரும் நிதியாண்டில் கட்டப்படும். இந்த ஆண்டில் 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும்

11:45 AM IST:

தமிழக பட்ஜெட்டில் குறு, சிறு தொழில் கடன் உதவி, கடற்கரை மேம்பாடு, பசுமை பேருந்துகள், மெட்ரோ விரிவாக்கம், கைவினைஞர்களுக்கு உதவி, குடிநீர் திட்டம், ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர் உட்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க

11:43 AM IST:

|| மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் | | | | | | | | pic.twitter.com/7oUGT6ydVZ

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

11:33 AM IST:

ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும். அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்

11:32 AM IST:

500 கிமீ தூர வனப்பகுதி சாலைகள் 250 கோடி செலவில் மேம்படுத்தப்படும். போக்குவரத்து துறைக்கு 1031 கோடி ரூபாய் செலவில் புதியதாக 3000 பேருந்துகள் வாங்கப்படும்.

11:29 AM IST:

|| மாணவியருக்கு மாணவியர் விடுதிகள் | | | | | | | | pic.twitter.com/42IuKBLKXL

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

11:28 AM IST:

தமிழ்நாட்டில் 1,125 புதிய மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை 950, மதுரை 100, கோவை 75 பேருந்துகள் அடங்கும். 

11:26 AM IST:

700 டீசல் பேருந்துகள் ரூ.70 கோடி செலவில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:23 AM IST:

தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள், அடையாறு நதி சீரமைப்பு, மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க

11:17 AM IST:

சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு. கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு

11:08 AM IST:

சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:07 AM IST:

கோவளம் அருகே சுமார் 3 அயிரம் ஏக்கர் பரப்பளவில் 350 கோடி ரூபாய் செலவில் புதிய நீர்தேக்கம் அமைக்கப்படும்.  சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க திருப்போரூரிலும் நீர்தேக்கம் அமைக்கப்படும்.

11:05 AM IST:

சென்னைக்கு அருகில் உலக தர வசதிகளுடன் புதிய நகரம்

|| சென்னைக்கு அருகில் உலக தர வசதிகளுடன் புதிய நகரம் | | | | | | | | | pic.twitter.com/EmikDLpJqR

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:59 AM IST:

ஓசூர் மற்றும் விருதுநகரி டைடல் பூங்கா அமைக்கப்படும். ஓசூர் டைடல் பூங்காவிற்கு ரூ.400 கோடி நிதி. திருச்சியில் 280 ஏக்கரில் வார்ப்பக பூங்கா அமைக்கப்படும். ரமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்

10:57 AM IST:

7 மாவட்டங்களில் புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள்

|| 7 மாவட்டங்களில் புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் | | | | | | | | pic.twitter.com/ldQeOsDlFM

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:56 AM IST:

10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும். கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில்  ரூ.74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு. 

10:45 AM IST:

தமிழ்நாட்டில் செமி கண்டெக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும். கோவை மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழிற் பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 
 
10:44 AM IST:

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.572 கோடி நிதி ஒதுக்கீடு. ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வில் பயின்று நேர்முக தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொக்கை வழங்கப்படும். 8 மாவட்டங்களில் புதியதாக கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என  அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

10:43 AM IST:

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்று நோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு. 14 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 
 
10:36 AM IST:

சென்னையில் அறிவியல் மையம் அமைப்பதகு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  அடுத்த நிதியாண்டில் ரூ.2500 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு உயர்கல்வித்துறைக்கு மொத்தமாக 8 ஆயிரத்து 494 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
10:34 AM IST:

4 மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டு பணிகள்

|| 4 மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டு பணிகள் | | | | | | | | pic.twitter.com/u1QTLYAMeb

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:31 AM IST:

மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள்

|| மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் | | | | | | | | pic.twitter.com/IZZO3G8Xhl

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:30 AM IST:

நிதி நிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு என  46 ஆயிரத்து 767 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வு எழுதுவோருக்கு சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படுன்ம்.  சேலம், கடலூர், திருநெல்வேலியில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் புதிய நூலகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

10:29 AM IST:

அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும். ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்

10:28 AM IST:

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்

|| முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் | | | | | | | | pic.twitter.com/R4KZ4f85QJ

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:27 AM IST:

பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும். 

10:22 AM IST:

முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்

|| முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் | | | | | | | | pic.twitter.com/R4KZ4f85QJ

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:20 AM IST:

மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 25 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்படும்.

10:20 AM IST:

ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர் இணைக்க நடவடிக்கை. சென்னை, தாம்பரத்தில் முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். 

10:18 AM IST:

சுய உதவிக்குழுக்களில் இதுவரை இணைந்திடாதவர்களை இணைக்கும் வகையில் 10,000 சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். 37 ஆயிரம் கோடியில் கடனும் வழங்கப்படும் என  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

10:17 AM IST:

ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம்

|| ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் | | | | | | | | pic.twitter.com/dF7WIQ66iN

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:16 AM IST:

பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும். மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது. மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

10:14 AM IST:

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் புதியதாக விண்ணப்பிக்கலாம்.  இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். புதுமை பெண் திட்டத்திற்கு 420 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

10:12 AM IST:

தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்

|| தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் | | | | | | | | pic.twitter.com/G8xxnMOZek

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:10 AM IST:

உலக தமிழ் ஒலிம்பியாட் - 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை

|| உலக தமிழ் ஒலிம்பியாட் - 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை | | | | | | | | pic.twitter.com/Ko8aNbqB4U

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

10:03 AM IST:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு

9:59 AM IST:

9:58 AM IST:

டாஸ்மாக் மூலமாக ரூ.1000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து இருப்பதாக கூறி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர். 

9:56 AM IST:

தமிழக பட்ஜெட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும். கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி  திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு. 100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்.

9:42 AM IST:

மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு. இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது. இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர்.

9:41 AM IST:

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவை பேச விடாமல் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். 

9:39 AM IST:

தமிழ்நாடு நாட்டின் சிறந்த இரண்டாவது பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும், சமநிலை தவறாமல் தமிழ்நாட்டை வழிநடத்துவோம் என தங்கம் தென்னரசு பேசி வருகிறார். 

9:27 AM IST:

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

9:25 AM IST:

தமிழ்நாடு பட்ஜெட் இன்று சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட மூத்த அமைச்சர்கள் வருகை தந்துள்ளனர்.

9:23 AM IST:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்  திமுக எம்.எல்.ஏ சந்திரகுமார் சட்டப்பேரவையில் பங்கேற்க முதல்முறையாக வருகை தந்துள்ளார். 

8:35 AM IST:

தமிழ்நாடு பட்ஜெட் இன்று சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடங்களில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தி வருகிறார். 

8:04 AM IST:

Magalir Urimai Thogai: 2025-2026ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிமைத் தொகை உயர்த்தப்படுமா அல்லது திட்டம் விரிவாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் படிக்க

7:51 AM IST:

2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு அரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை தொடங்க உள்ளார்.

7:48 AM IST: