திடீரென லண்டன் கிளம்பும் அண்ணாமலை! 6 நாள் பயணத்தின் பின்னணியில் உள்ள பிளான் என்ன?

By SG Balan  |  First Published Jun 21, 2023, 12:46 AM IST

தமிழக பாஜக தலைவரானதும் இரண்டு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அண்ணாமலை, தற்போது லண்டனுக்கு ஆறு நாள் பயணமாகச் செல்கிறார்.


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திடீரென லண்டனுக்குச் செல்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. புதன்கிழமை இரவு லண்டன் புறப்படுகிறார் என்றும் 6 நாள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்து வரும் நிலையில் அண்ணாமலை லண்டன் பயணிக்கிறார்.

லண்டனில் பிரிட்டன் வாழ் தமிழர்களைச் சந்திக்கும் அண்ணாமலை அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் மோடி அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்துப் பேசப் போகிறாராம். இந்தக் காரணத்திற்காகத்தான் அண்ணாமலை ஆறு நாள் பயணமாக புதன்கிழமை லண்டன் நகருக்குக் கிளம்புகிறாராம்.

Tap to resize

Latest Videos

19 கப்பல்களால் உருவாகும் யோகா வளையம்! இந்திய கடற்படை சொல்லும் யோகா தின மெசேஜ்!

இந்த பயணம் கட்சித் தலைமையால் திட்டமிடப்பட்டது என்றும் அதன்படி அண்ணாமலை கட்சி ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பார் என்றும் பாஜகவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக ஆன பின்பு, 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றார். அப்போது தனிப்பட்ட பயணமாகச் சென்றிருந்த அவர் அங்கு இரண்டு வாரம் தங்கினார். சமீபத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருக்கும் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவும் அவரோடு போயிருந்தால்.

போலீசை வைத்து மக்களை மிரட்டும் கர்நாடக அரசு... சித்தராமையாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

பிறகு இந்த ஆண்டு பிப்ரவரியில் இலங்கைக்குச் சென்றார் அண்ணாமலை. மூன்று நாட்கள் இலங்கையில் வலம் வந்த அவர், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு நிதியுதவியுடன் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றிருந்தால். இதைத் தொடர்ந்து இப்போது அண்ணாமலை லண்டனுக்குச் செல்கிறார்.

சென்னை தாம்பரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உரையின் இறுதியில் அண்ணாமலையை தாராளமாகப் புகழ்ந்து தள்ளினார். அண்ணாமலை, அண்ணாமலை என்று பல முறை பெயரை அழுத்திக் கூறிய அமைச்சர் ராஜ்நாத் சிங், "நான் பல வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். ஒருவரைப் பார்த்தவுடன் அவரைப் பற்றி என்னால் சொல்ல முடியும். அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு மட்டுமானவர் இல்லை. அவர் தேசியத் தலைவராக வளர்ந்துகொண்டிருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான் நினைவுக்கும் வரும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

click me!