வெளியானது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்... மாஸ் வேட்பாளர்களை களத்தில் இறக்கி அதிரடி காட்டும் அண்ணாமலை..

By vinoth kumar  |  First Published Mar 22, 2024, 2:09 PM IST

தமிழக பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தற்போது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. 


 தமிழ்நாட்டில் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், நாமக்கல் தொகுதியில் கே.பி.ராமலிங்கம், சிதம்பரம் தொகுதியில் கார்த்தியாயனி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக பாஜக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: A Raja 2G Appeal Case : 2ஜி வழக்கு.. ஆ.ராசாவுக்கு, கனிமொழிக்கு சிக்கல்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

இந்நிலையில், தற்போது  2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ராதிகா சரத்குமார், பால் கனகராஜ், கே.பி.ராமலிங்கம், ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்டோருக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

1) திருவள்ளூர் - பாலகணபதி

2) வட சென்னை - பால் கனகராஜ் 

3) திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்

4) நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்

5) திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம்

6) பொள்ளாச்சி - வசந்தராஜன்

7) கரூர் - செந்தில்நாதன்

8) சிதம்பரம்(தனி) - கார்த்தியாயினி

9) நாகை (தனி) - எஸ்.ஜி.எம்.ரமேஷ்

10) தஞ்சை - எம்.முருகானந்தம்

11) சிவகங்கை - தேவநாதன் யாதவ்

12) மதுரை - ராம சீனிவாசன்

13) விருதுநகர் - ராதிகா சரத்குமார்

14) தென்காசி - ஜான் பாண்டியன்

15) புதுச்சேரி - நமச்சிவாயம்

click me!