தமிழ்நாட்டு வீராங்கனை கமாலினி, சுப்ரமணிக்கு ரூ.25,00,000 ஊக்கத் தொகை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Published : Feb 08, 2025, 12:54 PM IST
தமிழ்நாட்டு வீராங்கனை கமாலினி, சுப்ரமணிக்கு ரூ.25,00,000 ஊக்கத் தொகை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சுருக்கம்

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் T20 உலகக் கோப்பையை வென்ற கிரிக்கெட் வீராங்கனை கு. கமாலினி மற்றும் கோ-கோ உலகக் கோப்பையை வென்ற வி. சுப்ரமணி ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் ரூ. 25 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மலேசியாவில் 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான T20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த செல்வி கு. கமாலினி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அவர்தான் விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு அரைச்சதம், 143 ரன்கள், 2 கேட்சுகள், 4 ஸ்டம்பிங் என நிகழ்த்தி அசாத்திய சாதனைகள் புரிந்துள்ளார். இந்த போட்டிகளில் செல்வி கு. கமாலினி அவர்களின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அதே போல், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகள், ஜனவரி 13 முதல் ஜனவரி 19, 2025 வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த திரு. V. சுப்ரமணி அவர்கள் அபாரமாக விளையாடியதற்காக “சிறந்த அட்டாக்கர் விருதை” வென்றார். இறுதிப் போட்டியில் நேபாள அணியை 54-36 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, இந்திய அணி கோ-கோ உலகக் கோப்பையை வென்றது. இந்த போட்டிகளில் திரு. V. சுப்ரமணி அவர்களின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான T20 கிரிக்கெட் உலகக்
கோப்பை போட்டியில் செல்வி கு. கமாலினி இந்தச் சாதனையைப் போற்றிப் பாராட்டும் வகையில், பல விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையிலும் செல்வி கு.கமாலினி அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூபாய் 25 லட்சம் வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த  V. சுப்ரமணி போல மேலும் பல விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்றுத் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையில், அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூபாய் 25 லட்சம் வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு