TN Assembly : தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல் மரியாதை! முதல்வர் விஜய் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு...!

Published : Aug 10, 2026, 11:19 AM ISTUpdated : Aug 10, 2026, 01:50 PM IST
Tamil Nadu Assembly Unites to Prioritize State Anthem Tamil Thai Vazhthu

சுருக்கம்

Tamil Nadu Assembly : கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொண்டுவந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கட்டாயம் பாட வேண்டும் என்பதை முறைப்படுத்தும் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தத் தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“தமிழ் என்றாலே பெருமை; தமிழ் என்றாலே சக்தி. தமிழ் என்ற வார்த்தை தமிழ்நாடு முழுவதையும் ஒன்றிணைக்கும் வலிமை கொண்டது. எனவே தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் முதல் இடம் இருக்க வேண்டும். அதற்கு முன்னுரிமை வழங்குவது நமது மாநில உரிமை” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தின் சிறப்பையும் மரியாதையையும் பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழக அரசு எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காது என்றும் முதலமைச்சர் கூறினார். இது அரசியல் சார்ந்த விவகாரமாக பார்க்கப்பட வேண்டியதில்லை என்றும், கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!

1970-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை

தமிழ்நாட்டின் முக்கியமான பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக தமிழ்த்தாய் வாழ்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. 1891-ம் ஆண்டு மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘மனோன்மணீயம்’ நாடகத்தில் இடம்பெற்ற பாடலில் இருந்து தமிழ்த்தாய் வாழ்த்து உருவாக்கப்பட்டது.

அரசு சார்ந்த விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடக்கத்தில் பாடும் நடைமுறை, 1970-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை மூலம் கொண்டு வரப்பட்டதாக தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்பின்னர், 2021 டிசம்பர் 12-ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரப்பூர்வமாக ‘மாநிலப் பாடல்’ அந்தஸ்து வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற நடைமுறையும் அமலுக்கு வந்தது.

TN Politics: தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்? உஷாராகும் விசிக, இடதுசாரிகள்.. ஸ்டாலினுக்கு சிக்கல்!

மத்திய உள்துறை அமைச்சக கடிதம் பின்னணி

உலகின் தொன்மையான செம்மொழிகளில் தமிழ் முக்கியமானது என்றும், தமிழர்களின் நாகரிகமும் பண்பாடும் நீண்ட வரலாற்றைக் கொண்டது என்றும் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் ஜூலை 9-ம் தேதி அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மாநில அளவில் வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்த விவாதம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

TN Politics 2026: திமுக ஆதரவில் தவெக ஆட்சி? இது உ.பி.க்களின் பெருமிதம் அல்ல! விஜய்யின் 'செக் மேட்' அரசியல்! செம வியூகம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chennai Weather: சுதந்திர தினம் வரை மழைதான்! தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும்?
மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பு! – திருப்பத்தூரில் காங்கிரஸின் பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணி!