ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கும், கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (23) என்ற எம்சிஏ பட்டதாரி இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கும், கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (23) என்ற எம்சிஏ பட்டதாரி இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரும் 12-ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.
இதையடுத்து, இரு வீட்டிலும் திருமண வேலைகள் தடல்புடலாக நடந்து வந்தன. திருமணத்துக்கு முதலவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொள்வதாக இருந்தது. இதையொட்டி, கடந்த 1-ம் தேதி காலை சந்தியா, தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். இந்த நேரத்தில் எங்கே செல்கிறாய் என குடும்பத்தினர் கேட்டதற்கு, சத்தியமங்கலத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்றார்.
ஆனால், அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சந்தியாவின் தாய் தங்கமணி, கடத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை தேடி வந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு, அவரது உறவினர் பெண்ணுடன், அதே தேதியில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மாயமான இளம்பெண் சந்தியா, தனது தோழி வீட்டில் தஞ்சமடைந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று நள்ளிரவில் அங்கு சென்று, இளம்பெண்ணை மீட்டனர். பின்னர், ஈரோடு நீதிமன்ற நீதிபதி வீட்டில் அவரை ஆஜர்படுத்தினர். விசாரணையில், 43 வயதாகும் அதிமுக எம்எல்ஏவை திருமணம் செய்ய விரும்பவில்லை. தன்னை விட 20 வயது மூத்தவருக்கு, உறவினர்கள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய இருந்ததாகவும், அதில் விருப்பம் இல்லாமல் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறினார். மேலும் அப்பா வயசு உள்ளவரை கல்யாணம் பண்ணிக்கணுமா என மணப்பெண் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து இளம்பெண்ணை, அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.