ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்ணின் தந்தை ரத்தினசாமி புகார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்ணின் தந்தை ரத்தினசாமி புகார் தெரிவித்துள்ளார். புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரன் இவருக்கு வயது 43, இவர் நீண்ட நாட்களாக திருமணத்தை பற்றி நினைக்காமல் இருந்து வந்தார். சமீபத்தில் தான் கோபி பகுதியைச் சேர்ந்த சந்தியா (23) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சந்தியா எம்.சி.ஏ. படித்துள்ளார்.
செப்டம்பர் 12-ம் தேதி பண்ணாரி அம்மன் கோயிலில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்காக பத்திரிகையும் அச்சடிக்கப்பட்டது. குடும்பத்தினர் திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்குக் கொடுத்து வந்தனர். இரண்டு வீடுகளிலும் கல்யாண களை கட்டியது. திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில், திடீரென சந்தியா கடந்த 1-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார்.
undefined
கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் தேடியும் சந்தியா கிடைக்கவில்லை. இதனையடுத்து சந்தியாவின் தாயார், கடத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சந்தியாவுக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், அவருடன் சந்தியா சென்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்ய முடிவு எடுத்த எம்எல்ஏ ஈஸ்வரன் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானதால் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். இந்த திருமண நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பதாக இருந்ததாக கூறப்படுகிறது.