ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் எஞ்சினுக்குள் நான்கு அடி நீள பாம்பு புகுந்துக் கொண்டது. இதனால் பதறிப்போன மோட்டார் சைக்கிள் உரிமையாளர் எப்படி பாம்பை விரட்டினார் என்று தெரிஞ்சுக்க தொடர்ந்து வாசிங்க...
ஈரோடு
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் எஞ்சினுக்குள் நான்கு அடி நீள பாம்பு புகுந்துக் கொண்டது. இதனால் பதறிப்போன மோட்டார் சைக்கிள் உரிமையாளர் எப்படி பாம்பை விரட்டினார் என்று தெரிஞ்சுக்க தொடர்ந்து வாசிங்க...
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேவுள்ளது காந்திநகர். இந்தப் பகுதியைச் சேர்ந்த நடராஜ் தனது டி.வி.எஸ். மோட்டார் சைக்கிளில் டீ கடைக்கு டீ குடிக்கச் சென்றுள்ளார். கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தார் நடராஜ்.
அப்போது, அருகில் இருந்த புதருக்குள் இருந்து வந்த பாம்பு ஒன்று அவரது மோட்டார் சைக்கிளின் என்ஜினுக்குள் புகுந்துவிட்டது. இதனைப் பார்த்தவர்கள் கூச்சலிட்டனர். அதனைக் கேட்டு வெளியேவந்த நடராஜன் தன்னுடைய மோட்டார் சைக்கிளி பாம்பு புகுந்ததைப் பார்த்து அலறினார்.
இதனைத் தொடர்ந்து நடராஜன், அருகில் இருந்தவர்கள் உதவியோடு மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். நீண்ட குச்சியைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பை தட்டிப்பார்த்தார். ஆனால், அது வெளியே வரவில்லை.
பின்னர், மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தால் சூட்டில் வெளியே வந்துவிடும் என்று அருகில் இருப்பவர்கள் சொன்னார்கள். அதன்படியே, நடராஜனும் வண்டியை ஸ்டார்ட் செய்து முறுக்கினார். இதில் என்ஜினின் சூட்டைத் தாங்க முடியாமல் பாம்பு வெளியே வந்தது.
பின்பு அந்தப் பாம்பை அங்கிருந்தவர்கள் கம்பால் அடித்துக் கொன்றார்கள். நான்கு அடி நீளமிருந்த அந்த பாம்பை தூக்கி மீண்டும் புதருக்குளேயே போட்டுவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் பாம்பு புகுந்ததால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.