Published : Mar 15, 2025, 07:18 AM ISTUpdated : Mar 15, 2025, 04:12 PM IST

TN Agriculture Budget 2025 LIVE Updates: இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா? வேளாண் பட்ஜெட் பெயரில் பொய் புரட்டு! அண்ணாமலை!

சுருக்கம்

தமிழக அரசின் 2025- 2026ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் திமுக அரசு தாக்கல் செய்கின்ற கடைசி வேளாண் பட்ஜெட் இதுவாகும். எனவே இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TN Agriculture Budget 2025 LIVE Updates: இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா? வேளாண் பட்ஜெட் பெயரில் பொய் புரட்டு! அண்ணாமலை!

04:12 PM (IST) Mar 15

இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா? வேளாண் பட்ஜெட் பெயரில் பொய் புரட்டு! அண்ணாமலை!

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளை வஞ்சிக்கும் காகிதக் குவியல் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். சாகுபடி பரப்பு குறைந்தது, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யாதது போன்ற குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் படிக்க

12:22 PM (IST) Mar 15

கரும்பு விவசாயிகளுக்கு ஜாக்பாட்! வேளாண் பட்ஜெட்டில் ஊக்கத்தொகை அறிவிப்பு!

TN Agriculture Budget 2025: தமிழக வேளாண் பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1.3 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

11:47 AM (IST) Mar 15

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி! ரூ.2.50 லட்சம் ரொக்க பரிசு அறிவிப்பு!

TN Agriculture Budget 2025: தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் எண்ணெய்வித்துகள் இயக்கம் மற்றும் அதிக உற்பத்திக்கு ரொக்கப்பரிசு போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க

11:17 AM (IST) Mar 15

வேளாண் தொழிலாளர்கள் விபத்து மரணம்! இழப்பீடு ரூ.2,00,000 உயர்வு!

2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியை உயர்த்தி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க

11:02 AM (IST) Mar 15

மலர் சாகுபடி! ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு

மதுரை மல்லி, ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

11:01 AM (IST) Mar 15

ஊட்டசத்து வேளாண்மை புதிய திட்டம் ரூ. 125 கோடியில் செயல்படுத்தப்படும்

ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் என்று புதிய திட்டம் ரூ. 125 கோடியில் செயல்படுத்தப்படும். நகர்ப்புற, கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்துகளை பாதுகாக்க 9 லட்சம் குடும்பங்களுக்கு, 75% மானியத்தில் எலுமிச்சை, கொய்யா செடிகளின் தொகுப்பு வழங்கப்படும். 

10:51 AM (IST) Mar 15

கரும்புக்கான ஊக்கத் தொகை ரூ. 215ல் இருந்து ரூ. 349 ஆக உயர்வு

கரும்புக்கான ஊக்கத் தொகை, ரூ. 215ல் இருந்து ரூ. 349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கரும்பு டன் ஒன்றுக்கு 3500 வழங்கப்படும். இதற்காக ரூ. 297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10:50 AM (IST) Mar 15

ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் பயணம்

ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு செயல்படுத்தப்படும் வேளாண் தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். 

10:48 AM (IST) Mar 15

ரூ. 12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம்

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, ரூ. 12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

10:47 AM (IST) Mar 15

நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள்

நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.  அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு. நம்மாழ்வார் விருது திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். 

10:36 AM (IST) Mar 15

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம்

ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம். தற்போதுள்ள 40% மானியம் 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும். 

10:32 AM (IST) Mar 15

ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம்!

ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம்!#TNBudget2025 #TamilnaduLeads #TNAgricultureBudget #TNAgriBudget2025 pic.twitter.com/PALZOzWnNV

 

10:29 AM (IST) Mar 15

சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு

இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும். சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ. 52 கோடி ஒதுக்கீடு. 

10:28 AM (IST) Mar 15

2 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ. 108 கோடி மதிப்பில் எண்ணெய் வித்து பயிர்கள்

சூரியகாந்தி, ஆமணக்கு எண்ணெய் உள்ளிட்ட வித்து பயிர்கள் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக, 2 லட்சம் ஏக்கர் பரப்பில் ரூ. 108 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம், 7.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர்.

10:24 AM (IST) Mar 15

முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம்! ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்

முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம், ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ. 269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

10:21 AM (IST) Mar 15

முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்வு

முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு. அதேபோல் இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும். இறுதி சடங்கு நிதி உதவி ரூ. 2,500ல் இருந்து ரூ. 10,000 உயர்த்தப்பட்டுள்ளது. 
 

10:18 AM (IST) Mar 15

மண்வளத்தினை மேம்படுத்திட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்!

மண்வளத்தினை மேம்படுத்திட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்!#TNBudget2025 | #TamilnaduLeads #TNAgricultureBudget #TNAgriBudget2025 pic.twitter.com/XiYmSzr9hv

 

10:17 AM (IST) Mar 15

மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம்! ரூ. 22 கோடி ஒதுக்கீடு

63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு. 

10:14 AM (IST) Mar 15

தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு

டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 102 கோடி ஒதுக்கீடு. தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு. 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ. 24 கோடி மானியம் வழங்கப்படும். 

10:14 AM (IST) Mar 15

கரும்பு உற்பத்தியில் தமிழ்நாட்டிற்கு 2ம் இடம்

கரும்பு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.841 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

10:12 AM (IST) Mar 15

30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை

30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

10:10 AM (IST) Mar 15

மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு

மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு!#TNBudget2025 #TamilnaduLeads #TNAgricultureBudget #TNAgriBudget2025 pic.twitter.com/Xnlay8GjG0

 

10:08 AM (IST) Mar 15

நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய "நெல் சிறப்புத் தொகுப்பு திட்டம்

 

 

10:07 AM (IST) Mar 15

1000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் வேளாண் பட்டயதாரர்கள் மூலம் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்!

 

 

10:03 AM (IST) Mar 15

1000 உழவர் நல சேவை மையங்கள்

ரூ.42 கோடியில் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். உழவர் நல மையங்கள் வாயிலாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். 

09:51 AM (IST) Mar 15

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை

2021-24 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 

09:50 AM (IST) Mar 15

வேளாண் தொழில் முனைவோர்களாக 431 இளைஞர்கள்

வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி  உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

09:43 AM (IST) Mar 15

உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் தயாரிப்பு

விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிப்பு. உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்பிகிறேன் என  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

09:42 AM (IST) Mar 15

பொருளதாரத்தில் தமிழ்நாடு 2வது இடம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செங்கோல் ஆட்சியில் தொழில்கள் பெருகி பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2வது இடம் பிடித்துள்ளது. 

09:36 AM (IST) Mar 15

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை இன்றும் புறக்கணித்த செங்கோட்டையன்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் நேற்று புறக்கணித்த நிலையில் இன்று புறக்கணித்துள்ளார். 

09:31 AM (IST) Mar 15

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை

இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். 

09:03 AM (IST) Mar 15

5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை இன்னும் சற்று  நேரத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

07:21 AM (IST) Mar 15

வேளாண் பட்ஜெட்டில் உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படுமா?

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.