Published : Mar 21, 2023, 06:26 AM ISTUpdated : Mar 21, 2023, 10:53 PM IST

Tamil Nadu Agriculture Budget 2023: 23 லட்சம் இலவச மின் இணைப்பு.. ரூ.6,536 கோடி ஒதுக்கீடு

சுருக்கம்

23 லட்சம் இலவச மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil Nadu Agriculture Budget 2023: 23 லட்சம் இலவச மின் இணைப்பு.. ரூ.6,536 கோடி ஒதுக்கீடு

10:53 PM (IST) Mar 21

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம்!!

துர்மெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிரிகிஸ்தான் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சில இடங்களில் 7.7 ரிக்டர் அளவில் இருந்துள்ளது

01:10 PM (IST) Mar 21

TNDALU Recruitment 2023 : 60 காலியிடங்கள்.. காத்திருக்கிறது உதவி பேராசிரியர் வேலை விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

12:27 PM (IST) Mar 21

3 டைடல் பூங்கா.. 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு - தமிழக இளைஞர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த திமுக அரசு

தமிழகத்துக்கு வரவிருக்கின்ற 3 டைடல் பூங்காக்களினால் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க

11:49 AM (IST) Mar 21

இந்த பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு.. வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு.!

தமிழக வேளாண் பட்ஜெட்டை 3வது முறையாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

மேலும் படிக்க

11:44 AM (IST) Mar 21

TN Agriculture Budget 2023 : ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட் 2023இல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

11:38 AM (IST) Mar 21

பள்ளி மாணவர்கள் வேளாண்மை பற்றி அறிந்துகொள்ள ரூ.1 கோடியில் பண்ணைச் சுற்றுலா

பள்ளி மாணவர்கள் வேளாண்மையை அறிந்துகொள்ள ரூ.1 கோடியில் பண்ணைச் சுற்றுலா என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:35 AM (IST) Mar 21

விவசாயிகளுக்கு அயல் நாட்டில் பயிற்சி.. ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு!

வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு நமது மாநிலத்தில் பின்பற்றும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

11:33 AM (IST) Mar 21

தக்காளி உற்பத்தியை அதிகரிக்க சொட்டு நீர் பாசனம்

தக்காளி உற்பத்தியை அதிகரிக்க சொட்டு நீர் பாசனம், அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை பயிரிடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும். 

11:32 AM (IST) Mar 21

முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஏக்கரில் சாகுபடிகளை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு

தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஏக்கரில் சாகுபடிகளை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:30 AM (IST) Mar 21

21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

கடலூர், குமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டேரில் பலா சாகுபடியை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

11:25 AM (IST) Mar 21

கோவையில் கருவேப்பிலை தொகுப்பு திட்டம்.. ரூ.2.5 கோடி ஒதுக்கீடு

கருவேப்பிலை சாகுபடியை 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டரில் செயல்படுத்த  ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:11 AM (IST) Mar 21

மதுரை மல்லிகைக்கு இயக்கம்

மல்லிகை பயிர் வேளாண் முறைகளை விசாயிகளுக்கு கற்றுத்தர ரூ.7 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:06 AM (IST) Mar 21

கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகை.. வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும். குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10:57 AM (IST) Mar 21

200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதியுதவி

வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதியுதவி என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

10:55 AM (IST) Mar 21

விவசாயிகளுக்கு பணமில்லா பரிவர்த்தனை.. வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு வழங்கப்பெறும் வேளாண் இடுபொருட்களுக்கு  பணமில்லா பரிவர்த்தனை என  வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

10:53 AM (IST) Mar 21

60,000 சிறு, குறு மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு ரூ.15 கோடியில் வேளாண் கருவிகள்

60,000 சிறு, குறு மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு ரூ.15 கோடியில் வேளாண் கருவிகள் தொகுப்பு விநியோகம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

10:50 AM (IST) Mar 21

வட்டார அளவில் வாட்ஸ் அப் குழு.. தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ் அப் குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

10:46 AM (IST) Mar 21

இந்த பயிர்களை அதிகளவு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு

கம்பு, கேழ்வரகு, திணை, சாமை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு தானிய மண்டலங்களில், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 

10:41 AM (IST) Mar 21

இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு

குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

10:39 AM (IST) Mar 21

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வேளாண் பட்ஜெட் உரை நேரடி ஒளிபரப்பு

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வேளாண் பட்ஜெட் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 

10:33 AM (IST) Mar 21

முதல்வரின் சிறுதானிய இயக்கம் செயல்படுத்த ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு

25 மாவட்டங்களில் முதல்வரின் சிறுதானிய இயக்கம் செயல்படுத்த ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

10:30 AM (IST) Mar 21

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்திற்கு 26 லட்சம் விவசாயிகள் பதிவு

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10:28 AM (IST) Mar 21

இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்..

ஊருக்கு 300 குடும்பங்களுக்கு வீதம் 15 லட்சம் இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கப்படும். 2504 கிராம ஊராட்சிகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்று வழங்கப்படும் என என அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

10:22 AM (IST) Mar 21

வரலாறு காணாத அளவில் நேரடி நெல் கொள்முதல்

வரலாறு காணாத அளவில் நேரடி நெல் கொள்முதல் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது. 

10:15 AM (IST) Mar 21

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதால் நிலத்தடி நீரின் அளவு அதிகரித்துள்ளது.

10:13 AM (IST) Mar 21

தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டர் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது. புன்செய் பயிர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

10:10 AM (IST) Mar 21

வேளாண்மை செழித்து வளர வேண்டும் என்பதற்காகவே தனி பட்ஜெட்

வேளாண்மை செழித்து வளர வேண்டும் என்பதற்காகவே தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக வசூல் செய்ய இலக்கு என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

09:12 AM (IST) Mar 21

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்..! விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன..? புதிய அறிவிப்புகள் வெளியாகுமா.?

இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம், நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை இந்த பட்ஜெட்டில்  உயர்த்தி வழங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். 

மேலும் படிக்க..

09:03 AM (IST) Mar 21

கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்யவுள்ளார். அதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். 

08:45 AM (IST) Mar 21

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்..! விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன..? புதிய அறிவிப்புகள் வெளியாகுமா.?

இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம், நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை இந்த பட்ஜெட்டில்  உயர்த்தி வழங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். 

மேலும் படிக்க

08:01 AM (IST) Mar 21

கரும்பு விவசாயிகளுக்கு புதிய சலுகைகள் இன்றைய பட்ஜெட்டில் இடம்பெறுமா?

தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு புதிய சலுகைகள் இன்றைய பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

07:12 AM (IST) Mar 21

3வது முறையாக வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021 மே மாதம் திமுக ஆட்சி பதவியேற்றது முதல் தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 3வது முறையாக வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.