
இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, உச்சகட்டத்தில் நடந்த போராட்டத்தில், 1 பெண்கள் உட்பட 10 பேர் சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மக்கள் நலனுக்காக போராடியவர்களை, இப்படி அநியாயமாக சுட்டுக் கொன்றிருப்பது ஜனநாயகத்திற்கே எதிரானது. தமிழக மக்கள் மத்தியில், கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தை கண்டித்து, பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஷாலும் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த சம்பவத்தை கண்டித்து அரசிடம் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதில்” ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அப்பாவி மக்களின் உயிரைப்பறித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன். 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள் என்றால், அதில் தூத்துக்குடி மக்களின் நலனை காப்பதற்கான, அவர்களின் ஒற்றுமை தெரிகிறது.
இப்போதாவது உங்கள் மெளனத்தை விடுத்து ஒரு முடிவை சொல்லுங்கள் என பிரதமரிடம் ஆவேசமாக அதில் கேள்வி எழுப்பியிருக்கிறார் விஷால். போராட்டம் என்பது ஜனநாயகத்தின் அடையாளம். மக்கள் அதை ஏன் செய்யக்கூடாது? அரசாங்கம் என்பது மக்களுக்கானது. 2019 தயவு செய்து கவனமாக இருங்கள் எனவும் அதில் விஷால் தெரிவித்திருக்கிறார்.