குழந்தை பிறந்த 10 நாட்களிலேயே மக்கள் பணியில் ஈடுபட்ட தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரிக்கு பொதுமக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக வசந்தகுமாரி பொறுப்பேற்றார். 26 வயதேயான தமிழகத்தின் இளம் மேயரான வசந்தகுமாரிக்கு கடந்த மாதம் 21ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து பத்து நாட்களே நிறைவடைந்த நிலையில் 11-வது நாளான இன்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் வசந்தகுமாரி மக்கள் பணியை தொடங்கினார்.
பரோட்டா சாப்பிடும் போட்டி; சூரிக்கே டஃப் கொடுத்த அரியலூர் இளைஞர்கள்
undefined
பிரசவ காலத்தில் விடுபட்ட கோப்புகளின் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அதிகாரியிடம் கூறினார். குழந்தை பிறந்து பத்து நாட்களில் மக்கள் பணியாற்ற மாநகராட்சி அலுவலகம் வந்த மேயருக்கு பணியாளர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
பிரசவத்திற்கு செல்வதற்கு முன்னர் வளையல்காப்பு முடிந்து 9ம் மாதமான நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதும் அவர் இதுபோன்று மக்கள் பணியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றார். குறிப்பாக தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 50வது வார்டில் கால்வாய் பணி, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் நடைபெற்றன. அவற்றை நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்று மேயர் திட்டமிட்டார்.
குரோம்பேட்டையில் தம்பதி கழுத்து அறுக்கப்பட்டு மர்ம மரணம்; காவல்துறை விசாரணை
உடன் இருந்த அதிகாரிகள் நிறை மாதத்தில் களப்பணிகள் வேண்டாம் அலுவல் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு ஓய்வு எடுங்கள் என்று அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் அவற்றை பொருட்படுத்தாத வசந்தகுமாரி அந்த காலத்திலும் கள ஆய்வுக்கு சென்று அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்கினார்.