தாம்பரம் - கொல்லம் இரயில் சேவையை தினசரி இயக்க கோரிக்கை... 

 
Published : May 12, 2018, 07:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
தாம்பரம் - கொல்லம் இரயில் சேவையை தினசரி இயக்க கோரிக்கை... 

சுருக்கம்

Tambaram - kollam daily railway service

விருதுநகர் 

தாம்பரம் - கொல்லம் இரயில் சேவை தினசரி இயக்கப்பட வேண்டும் என்று தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

விருதுநகர்  மாவட்டம், ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க செயலாளர் ஆ.ஊ.வெங்கடேஸ்வர ராஜா நேற்று செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டார். 

அதில், "தாம்பரம் - கொல்லம் இரயில் சேவை தினசரி இயக்கப்பட வேண்டும். 

பொதிகை அதிவிரைவு ரயிலில் தற்பொழுது உள்ள ஒரு முதல் வகுப்பு பெட்டியை மூன்றாக உயர்த்த வேண்டும். 

செங்கோட்டை - கோயம்புத்தூருக்கு தினசரி பயணிகள் இரயில் இயக்கவேண்டும்.
  
குருவாயூர், அனந்தபுரி விரைவு இரயில்களை தென்காசி - ராஜபாளையம் வழியாக மாற்றி இயக்க வேண்டும். 

ராஜபாளையம் இரயில் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தவும் வெளியேறவும் தனியாக ஒரு நுழைவு வாயில் அமைக்க வேணடும். 

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நடைமேடைகளில் தேவையான மின்விளக்குகள், கட்டண கழிப்பிடம், ஜெனரேட்டர் வசதிகள் மற்றும்  இரு நடைமேடைகளிலும் கடைசி வரை ஒலி பெருக்கி உள்ளிட்ட  பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.  

இது தொடர்பாக இரயில்வே ஆலோசனை கூட்டத்தில் மதுரை கோட்ட இரயில்வே மேலாளரிடம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க துணைத்தலைவர் சு.பத்மநாபன் மனு அளித்தார்" என்று அதில் கூறியிருந்தார். 
 

PREV
click me!

Recommended Stories

தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!
தவெகவில் இணைந்த பெலிக்ஸ் ஜெரால்டு! சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய விஜய்! தவெகவினர் குஷி!