ரூ.10 நாணயத்தை வாங்கவில்லையா? 1077 நம்பருக்கு புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பாங்க…

 
Published : Mar 31, 2017, 11:29 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
ரூ.10 நாணயத்தை வாங்கவில்லையா? 1077 நம்பருக்கு புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பாங்க…

சுருக்கம்

Take Rs 10 coin The number given to the complaint etuppanka the action

ரூ.10 நாணயங்களை வாங்கவில்லை என்றால் 1077 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.

உயர் பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு தமிழகத்தின் பல்வேறு மற்ற நோட்டுகளும் மதிப்பு இழந்தது என்று வதந்திகள் பரவுகிறது. அவை வதந்தி என்ற தெரிந்த பின்பு அனைவரும் அமைதியாகினர். ஆனால், பத்து ரூபாய் நாணயம் கள்ள நாணயம் என்று கட்டவழித்து விடப்பட்ட அந்த வதந்தி இன்னும் தமிழகம் முழுவதும் சுற்றுகிறது.

பெட்டிக் கடையில் இருந்து, பேருந்து என அனைத்து இடங்களிலும் ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் அதிகம். பலமுறை வதந்தி என்று சொன்ன பிறகும் நம்பாமல் இருப்பது மக்களின் அறியாமை தான்.

ஒவ்வொரு குறைதீர்ப்புக் கூட்டத்திலும் 10 ரூபாய் நாணயம் குறித்து ஒரு மனு வந்துவிடும். அதை சரிசெய்யவே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், ரூ.10 நாணயங்களை வணிக நிறுவனங்கள், ஆட்டோ, பேருந்துகள், சந்தை உள்ளிட்ட இடங்களில் வாங்கிக் கொள்ள தடை எதுவுமில்லை.

இதனை பெற மறுப்பவர்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண் 1077-ல் புகார் தரலாம்.

புகார் அளிப்பவர்களுக்கு, செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்வதில் ஏன் இவ்வளவு ஆர்வம்? லெப்ட் ரைட் வாங்கிய கையோடு சென்னை ஐகோர்ட் ஜாமீன்!
புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!