"அடடே இது நல்லா இருக்கே.. வீணாகும் கருப்பு பணத்தை போட சென்னையில் திறக்கப்பட்ட ‘’பணத்தொட்டி'’

 
Published : Nov 11, 2016, 05:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
"அடடே இது நல்லா இருக்கே.. வீணாகும் கருப்பு பணத்தை போட சென்னையில்  திறக்கப்பட்ட ‘’பணத்தொட்டி'’

சுருக்கம்

மத்திய அரசு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் கடும் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதால் வீணாகும் கருப்பு பணத்தை செல்வந்தர்கள் ஏழைகளுக்கு ரூ.1 லட்சமாக அளிக்கலாம். அப்படி பயமிருந்தால் நாங்கள் பணத்தொட்டி திறக்கிறோம் அதில் போடுங்கள் என்கிறார், இந்திய தேசிய லீக் தலைவர். 

இதற்காக அவரது அலுவலக வாசலில் பணத்தொட்டியும் வைக்க போகிறாராம். இது குறித்த தடா ரஹீம் அறிக்கை: 

2.5 லட்சம் ரூபாய் வரை வங்கியில் டெபாஸிட் செய்யலாம் மத்திய அரசு. பல கோடி கருப்பு பணம் வைத்துள்ள செல்வந்தர்களே .பலனற்று போகும் பணத்தை வறுமையில் வாழும் ஏழை மக்களுக்கு நபர் ஒருவருக்கு லட்சம் ரூபாய் கொடுத்து உதவுங்கள் .

ஏழை மக்களுக்கு கொடுக்க பயந்தால் இந்திய தேசிய லீக் கட்சி தலைமை அலுவலகத்தில் " பண தொட்டி " வைக்க உள்ளோம் அந்த தொட்டியில் நீங்க போட்ட பணத்தை ஏழை மக்களுக்கு இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் பகிர்ந்து  வினியோகிப்பார்கள் .

இன்றைய 500 , 1000 நோட்டுகள் நாளைய காகிதமாக மாறும் .இப்போதே உங்க பணத்தை வறுமையில் வாழும் ஏழை மக்களுக்கு கொடுத்து உங்க பாவத்திற்க்கு பரிகாரம் தேடி கொள்ளுங்க .

" பண தொட்டி "

339 காயிதே மில்லத் ரோடு

ஆதம் மார்கட் வளாகம்

திருவல்லிகேணி 

சென்னை -5 

அன்புடன்

தடா ஜெ.அப்துல் ரஹிம்

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!