அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு வந்த Swiggy டெலிவரி.. நான் டெலிவரி பண்ண வந்தேன் - அதிர்ச்சி சம்பவம்

Published : Jul 17, 2023, 01:51 PM IST
அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு வந்த Swiggy டெலிவரி.. நான் டெலிவரி பண்ண வந்தேன் - அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

அமைச்சர் பொன்முடியின் மகன் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அறக்கட்டளை முதல் கல்லூரி வரை.. ரெய்டில் வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி - அமலாக்கத்துறை சோதனை பின்னணி

விழுப்புரத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் சோதனை நடைபெறும் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு 'பர்கர்' வந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் ஆர்டர் செய்த ரூ.175 மதிப்புள்ள 15 பர்கர்கள் ஆர்டர் செய்தனர். அமைச்சர் பொன்முடி வீட்டில் 6 மணி நேரமாக நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Ponmudi ED Raid : அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு.. அமலாக்கத்துறை அதிரடி சோதனை.. திமுகவினர் அதிர்ச்சி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!
Govt Business Training: நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்.! சென்னையில் 5 நாள் பயிற்சி.! A to Z கத்துக்கலாம் வாங்க.!