விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்- 2 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவு

 
Published : Apr 13, 2017, 12:42 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் தமிழக அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்- 2 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவு

சுருக்கம்

supreme court condemns TN govet in farmers protest issue

டெல்லியில் நடக்கும் போராட்டம் குறித்து 2 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு மெத்தனமாக செயல்பட கூடாது என கண்டனம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தற்கொலை மற்றும் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் மெத்தன போக்கில் உள்ளது என தமிழ்நாடு பொதுநல வழக்காடு மன்றம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவசாயிகளின் பிரச்சனைக்கு 2 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதில் உச்சநீதிமன்றம் கூறியதாவது.

உலக்குக்கே உணவு அளிக்கும விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது. கடந்த 30 நாட்களாக விவசாயிகள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற பிரச்சனையை கண்டு கொள்ளாமல் அமைதி காப்பது சரியான அணுகுமுறை கிடையாது. அதனை உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வளவு தூரத்துக்கு போராடும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த அரசு முன் வரவேண்டும். தற்கொலையை தடுக்க மனிதாபிமானம் வேண்டும். தனது மெத்தன போக்கை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் என கண்டனம் தெரிவித்தது.

இன்னும் 2 வாரத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கியது. அதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!
ஜனவரி 7ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு