சூப்பர் மார்க்கெட்டில் தீ; பல இலட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்…

Asianet News Tamil  
Published : Oct 18, 2016, 12:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
சூப்பர் மார்க்கெட்டில் தீ; பல இலட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்…

சுருக்கம்

மணவாளக்குறிச்சியில் சூப்பர் மார்க்கெட்டில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து நடந்தது. இதில் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியது.

மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் முகம்மது பஷீர் (53). இவர் மணவாளக்குறிச்சியில் இருந்து அம்மாண்டிவிளை செல்லும் சாலையில், சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். சனிக்கிழமை இரவு வழக்கம் போல் சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் சூப்பர் மார்க்கெட்டின் உள்பகுதியில் இருந்து புகை வந்தது. இதைபார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் முகம்மது பஷீருக்கு தகவல் தெரிவித்தனர்.

அத்துடன், குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி அண்ணாத்துரை தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூப்பர் மார்க்கெட்டில் எரிந்து கொண்டிருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. மேலும், சூப்பர் மார்க்கெட்டின் கட்டிடங்கள் சேதமடைந்து இடிந்து தரைமட்டமானது. தீ விபத்தில் எரிந்து நாசமான பொருட்களின் மதிப்பு பல இலட்சம் இருக்குமென்று கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மணவாளக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

99% வாக்குறுதி நிறைவேற்றமா..? மனசாட்சியே இல்லாம பொய் பேசலாமா முதல்வரே..? விளாசும் அன்புமணி
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு!