வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களுக்கு சூப்பர் அறிவிப்பு! முதல்வர் ஸ்டாலின் அதிரடி !

By vinoth kumar  |  First Published Dec 19, 2024, 1:38 PM IST

Tamil Nadu Government: தமிழ்நாடு அரசு 18 மாவட்டங்களில் 177.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய்பட்டுள்ளது.


ஊரகப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே தமிழ்நாடு அரசின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளான சாலைகள், உயர்மட்ட பாலங்கள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனைத் திறம்படச் செயல்படுத்தி, தமிழ்நாடு அரசு நாட்டிலேயே முன்னோடியாக விளங்கி வருகிறது.

2024-25 ஆம் ஆண்டில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள்,  முதலமைச்சர்  அறிவிப்புகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் தேவைப்படும் உயர்மட்ட பாலங்களை முன்னுரிமைப்படுத்தி, 18 மாவட்டங்களில் 1977.20 மீ நீளமுள்ள 34 உயர்மட்ட பாலங்கள் ரூபாய் 177.85 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள் விவரம்:

* கோவை மாவட்டம் காரமடை வட்டத்தில் சிக்காரபாளையம் - கருப்பராயன் நகர் சாலை ஏலருமல்பள்ளம் ஆற்றில் ரூபாய் 2 கோடியே 83 இலட்சம் செலவில் ஒரு பாலம் 

* கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் மலட்டாறு ஆற்றில் திருவாமூர் ஊராட்சியில் ரூபாய் 8 கோடியே 13 இலட்சத்து 44ஆயிரம் செலவில் ஒரு பாலம்

* திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் குடகனாறு ஆற்றில் மணலூர் ஊராட்சியில் சித்தரேவு தாண்டிக்குடி சாலையில் ரூபாய் 8 கோடியே
52 இலட்சத்து 69ஆயிரம் செலவில் ஒரு பாலம். 

* தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில் நலுங்கு பாறை ஆற்றில் வாச்சாத்தி அரசநத்தம் இடையில் ரூபாய் 3 கோடியே 83 இலட்சம்
செலவில் ஒரு பாலம்

* ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில் செல்லபூரம்மன் ஓடையில் ரூபாய் 5 கோடியே 12 இலட்சத்து 20ஆயிரம் செலவில் ஒரு பாலம்

* கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் கொரட்டி ஆற்றில் ரூபாய் 5 கோடியே 57 இலட்சம் செலவில் ஒரு பாலம்

* கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் பாம்பாறு ஆற்றில் ரூபாய் 4 கோடியே 32 இலட்சத்து 20 ஆயிரம் செலவில் ஒரு பாலம்

*  கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டத்தில் வேப்பனப்பள்ளி தீர்த்தம் சாலை கத்திரிபள்ளியில் ரூபாய் 7 கோடியே 1 இலட்சத்து 40 ஆயிரம் செலவில் ஒரு பாலம் 

* கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டத்தில் ஒட்டப்பள்ளி பட்டிபடுகு சாலையில் ரூபாய் 3 கோடியே 59 இலட்சத்து 90 ஆயிரம் செலவில்
ஒரு பாலம் 

* மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் பதினெட்டாம்குடி ஓடையில் 1 கோடியே 42 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் வட்டத்தில் புதுபட்டி கெடமலை சாலையில் 3 கோடியே 12 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* புதுப்பட்டி அதே சாலையில் 2 கோடியே 68 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் மற்றொரு பாலம் ;

* சேலம் மாவட்டம், பி.என்.பாளையம் வட்டத்தில் வில்வனூர் மாயவன் கோவில் சாலையில் வசிஸ்டர் ஆற்றில் 3 கோடியே 91 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* ஆத்தூர் வட்டத்தில் துலுக்கானூரில் வசிஸ்டர் ஆற்றில் 4 கோடியே 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* கங்கவள்ளி வட்டத்தில் வேப்படி பாலக்காடு சாலையில் 1 கோடியே 74  இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* அயோத்தியா பட்டினம் வட்டத்தில் திருமணிமுத்தாரில் 1 கோடியே 99 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.

* பி.என்.பாளையம் வட்டம் வைத்திய கவுண்டன் புதூர் ஏத்தாப்பூர் சாலையில் வசிஸ்டர் ஆற்றில் 5 கோடியே 89 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்
செலவில் ஒரு பாலம்

* அதே பி.என்.பாளையம் வட்டம் இடையாப்பட்டி ஊராட்சியில் வசிஸ்டர்  ஆற்றில் குறுக்கே 3 கோடியே 76 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.

* நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் தாவணி - மல்லிக்கோரை சாலையில் 3 கோடியே 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டத்தில் தாராபுரம் வெள்ளக்கோவில்சாலை அமராவதி ஆற்றில் 14 கோடி ரூபாய் செலவில் ஒரு பாலம்

* தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டத்தில் பட்டுவனாச்சி ஓடையில் 4 கோடியே 10 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில் ஆறுமுக மங்களம் சாலையில் 3 கோடியே 36 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் டி.புதுபட்டி சின்னையபுரம் சாலையில் 3 கோடியே 97 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உப்பாறு ஆற்றில் குறுக்கே இரத்தினகுடிசாலை ஆர்.வளவனூர் ஊராட்சியில் 10 கோடியே 91 இலட்சத்து
45 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் களத்தில் வென்றார் பேட்டை சாலையில் நந்தியூர் கால்வாயில் 10 கோடியே 19 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் புல்லம்பாடி வைக்கல் புரந்தகுடி - ரெத்மாங்குடி சாலையில் குறுக்கே 2 கோடியே 81 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்தில் வெங்கடாசலபுரம் பிரான்சேரி சாலையில் சித்தாறு ஆற்றில் 10 கோடியே 63 இலட்சத்து 28
ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம் பெருமாள்கோவில் அருகே பேயாற்றின் குறுக்கே 2 கோடியே 28 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* வேலூர் மாவட்டம், அதே அணைக்கட்டு ஒன்றியத்தில் பெருமாள்கோவில் அருகே பேயாற்றின் குறுக்கே 2 கோடியே 36 இலட்சத்து 66
ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* வேலூர் மாவட்டம், அதே அணைக்கட்டு ஒன்றியத்தில் பொய்கை கிராமத்தில் சதுப்பேரி கால்வாய் குறுக்கே 1 கோடியே 65 இலட்சத்து 52
ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* விழுப்புரம் மாவட்டம், மரக்கானம் வட்டம், அன்னம்புதூர் - ஓமந்தூர் சாலையில் நரசிம்மனாறு ஓடையின் குறுக்கே 5 கோடியே 51 இலட்சத்து 42
ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், சிறுவாடியில் செஞ்சி ஆற்றில் குறுக்கே 6 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு பாலம்

* விழுப்புரம் மாவட்டம், வள்ளம் வட்டத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கொங்கராபட்டு - மணியம்பட்டு இடையே 9 கோடியே 10 இலட்சம்
ரூபாய் செலவில் ஒரு பாலம்

* விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கணக்கநேந்தல் - ஜோகில்பட்டி இடையே குண்டாறு ஆற்றின் குறுக்கே 9 கோடியே 89 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம்  என மொத்தம் 34 பாலங்களை 177 கோடியே 84 இலட்சத்து 60 ரூபாய் செலவில் 18 மாவட்டங்களில் கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள். இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

click me!