பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு ஆண்டு தோறும் நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, சர்க்கரை, ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
கடலூரில் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதல்; நூற்றுக்கணக்கில் செத்து மடிந்த உயிர்கள்
ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும். கரும்புகளை தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து அரசே விநியோகம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கரும்பு இல்லாமல் பொங்கல் தொகுப்பு வழங்கக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள்; கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பெரிய கருப்பண், சக்கரபாணி, உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பச்சரிசி, சர்க்கரை, ஆயிரம் ரொக்கம் மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வரின் அறிவிப்பால், தாங்கள் விளைவித்த கரும்புகளை நேரடியாக அரசிடம் விற்பனை செய்துவிடாலம் என்ற எண்ணத்தில் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.