பொறுக்கிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க குடியரசுத்தலைவர் ஆட்சி… சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி..

Asianet News Tamil  
Published : Jan 24, 2017, 08:51 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
பொறுக்கிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க குடியரசுத்தலைவர் ஆட்சி… சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி..

சுருக்கம்

பொறுக்கிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க குடியரசுத்தலைவர் ஆட்சி… சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி..

உச்சநீதிமன்றத் தடையை அடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மாநிலம் முழுவதும்  இளைஞர்கள், மாணவர்கள் தீவிர போராட்டத்தை கையிலெடுத்தனர்.

பீட்டாவின் ஏஜெண்ட்டான சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுடிருந்தவர்களை பொறுக்கிகள் என தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வந்தார்.

இதனால் தமிழகத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் கமலஹாசன், ஆம் நாங்கள் தமிழ் பொறுக்கிகள்தான் ஆனால் டெல்லியில் பொறுக்குபவர்கள் அல்ல என கடுமையான பதிலடி கொடுத்திருந்தார்.


ஆனாலும் சுப்பிரமணியன் சுவாமி தமிழர்களை பொறுக்கிகள் என தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது . மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில்  கலவரங்கள் நடந்தன. இதனால் நேற்று முழுவதும் சென்னை ஸ்தம்பித்தது.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என பதிவு செய்திருந்தார்.

President's Rule necessary. CRPF, BSF and Army must be mobilised for strike. It is now or never to recover TN from Naxals & Jehadis& Porkis

அவர் தனது பதிவில், குடியரசுத்தலைவர் ஆட்சியை கட்டாயம் கொண்டு வர வேண்டும். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் ராணுவ போன்றவற்றை கொண்டுவர வேண்டும். நக்சல்கள், ஜிகாதிகள் மற்றும் பொறுக்கிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க இதுவே சரியான தருணம் எனவும் சு,சாமி  குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!