உஷார்... ATM-ல் பணம் எப்படி திருடப்படுகிறது...? எச்சரிக்கை விடுக்கும் காவலர் வீடியோ..! மிஸ் பண்ணிடாதீங்க..!

 
Published : Aug 01, 2018, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
உஷார்... ATM-ல் பணம் எப்படி திருடப்படுகிறது...? எச்சரிக்கை விடுக்கும் காவலர் வீடியோ..! மிஸ் பண்ணிடாதீங்க..!

சுருக்கம்

subinspector atm money thieft awarnes video

நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது திருட்டு சம்பவங்கள். இதனால் பலர் சுதந்திரமாக சாலையில் நடந்து செல்ல கூட தயங்குகிறார்கள். முன்பெல்லாம் தெரியாமல் பிட் பாக்கெட் அடித்து மலையேறி போய் தற்போது, கண்களுக்கு முன்பே செயின் பறிப்பு, கையில் உள்ள செல் போன்களை திருவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், சிலர் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ATM அட்டைகளில் உள்ள பணத்தை நமக்கே தெரியாமல் திருடுகிறார்கள். இதனை தடுப்பது எப்படி? நாம் ஏமாறுவது எதனால்? என்பதை பற்றி தன்னுடைய முகநூல் பக்கத்தில் விளக்கமாக கூறியுள்ளார். திருவண்ணமலை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆக பணியாற்றி வரும் சத்யா. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதில், எப்படி சாமானிய மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பணத்தை திருடுவதற்கு நாம் எப்படி வழி வகுக்கிறோம் போன்ற தகவல்களை கூறியுள்ளார். 

மேலும் இதுபோன்ற பயனுள்ள வீடியோவை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் காவலர் சத்தியாவிற்கு பொது மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு
அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!