மருத்துவ படிப்புகளுக்கு செப்.22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்... அக்.3 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு!!

By Narendran SFirst Published Sep 20, 2022, 4:54 PM IST
Highlights

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 22 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 22 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 2022-2023 ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் / சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள் / சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ வரவேற்கப்படுகின்றன. இடங்கள் சேருவதற்கான இணையதன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதையும் படிங்க: 3 நாட்களில் சரியாகி விடும் காய்ச்சலுக்கு, எப்படி பள்ளிக்கு விடுமுறை அளிக்க முடியும்.? அமைச்சர் மா.சு.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மருத்துவப் படிப்புக்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3 ஆம் தேதி கடைசி நாள். www.tnhealth.tn.gov.in., www.tnmedicalselection.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!