மத்திய பல்கலைக்கழகத்தில் தரமற்ற உணவால் மாணவர்களின் உடல்நிலை  பாதிப்பு; நல்ல உணவு கேட்டு போராட்டம்...

 
Published : Apr 04, 2018, 08:26 AM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
மத்திய பல்கலைக்கழகத்தில் தரமற்ற உணவால் மாணவர்களின் உடல்நிலை  பாதிப்பு; நல்ல உணவு கேட்டு போராட்டம்...

சுருக்கம்

students affected by unhealthy food in Central University students protest

திருவாரூர்

மத்திய பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் தரமற்ற உணவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியுறும் மாணவ - மாணவிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், அருகே நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு துறையில் பயின்று வருகின்றனர். 

இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலானோர் வெளிமாநிலம், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 

இந்த மாணவர்களுக்காக இருக்கும் உணவு விடுதியில் உணவுகள் தரமற்றவையாக உள்ளதாகவும், இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவர்கள் மிகவும் அவதி அடைகின்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். 

இந்த நிலையில் மாணவ - மாணவிகள் நேற்று பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தின் கட்டிடத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது, "தற்போது உணவகம் நடத்துபவரின் ஒப்பந்த உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தரமான உணவு தயாரிக்கும் உணவக ஒப்பந்தகாரருக்கு அனுமதி வழங்கிட வேண்டும்" என்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

மாணவர்களின் இந்தப் போராட்டத்தினால் பல்கலைக்கழக வளாகம் பரபரப்பானது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!