
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் இன்று 21 வது நாளாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பலவித நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்,போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் சென்னையில் அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமித்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த போராட்டமானது இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.