SIR-ஐ உடனே நிறுத்துங்க..! இல்லனா உச்சநீதிமன்றம் செல்வோம்..! அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

Published : Nov 02, 2025, 01:27 PM IST
Tamilnadu

சுருக்கம்

S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்த வேண்டும் என தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. SIR என்னும் பெயரில் பாஜக அரசு மக்களின் வாக்குரிமையை தடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், SIRக்கு எதிராக திமுக தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

SIR-க்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டம்

இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய முஸ்லீல் யூனியன் லீக், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்துக் கட்சி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "தேர்தலுலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்வது பாஜகவுக்கு எதிரான வாக்குகளை நீக்கும் தந்திரமாகும். தேர்தல் நேர்மையாக நடைபெற உண்மையான உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் தான். ஆனால் SIR பணிகளுக்கு உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும்'' என்றார்.

SIR-ஐ நிறுத்தி வைக்குமாறு தீர்மானம்

தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ, வீரமணி, திருமாவளவன், செல்வபெருந்தகை, கமல்ஹாசன் ஆகிய தலைவர்கள் SIRக்கு எதிராக பேசினார்கள். இதன்பின்பு சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படி SIR-ஐ நிறுத்தி வைக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை செயல்படுத்துது முற்றிலும் ஜனநாயக விரோத செயலாகும். SIR மூலம் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் அதன் கைப்பாவையாக செயல்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடித்து 2026 தேர்தலுக்குப் பின்பு SIR-ஐ நடத்த வேண்டும். மக்களின் வாக்குரிமையை பறிக்கும் SIR-ஐநிறுத்தா விட்டால் அனைத்து கட்சிகளும் உச்சநீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் இயற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காவல் நிலையத்தில் புகுந்து காவலருக்கு வெட்டு.. தமிழகத்தில் தினமும் 5 படுகொ**லை.. ஷாக் கொடுக்கும் அன்புமணி
தனிக்கட்சியா..? அமித்ஷாவிடம் பேசியது என்ன? உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்!