குரங்கின் ஆசன வாயில் கம்பைச் சொருகி எரித்துக் கொன்ற மருத்துவ மாணவர்கள்…

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 11:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
குரங்கின் ஆசன வாயில் கம்பைச் சொருகி எரித்துக் கொன்ற மருத்துவ மாணவர்கள்…

சுருக்கம்

வேலூரில் விடுதியில் நுழைந்த குரங்கைப் பிடித்த மருத்துவ மாணவர்கள், அதன் ஆசன வாயில் கம்பைச் சொருகி கொன்று எரித்து புதைத்துள்ளனர்.

சென்னையில் சில நாள்களுக்கு முன்பு, உயரமான கட்டடத்தில் இருந்து நாய் ஒன்றை தூக்கியெறிந்து அந்த நாய் படும் துயரத்தை இரசித்த மருத்துவ மாணவர்களின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியது. அனைவரும் அதற்கு ஏதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தூக்கி எறிந்தவருக்கு தண்டனை கிடைத்தது.

இந்த சம்பவம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில், இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள் மருத்துவ மாணவர்கள்.

வேலூர் கிறித்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் நுழைந்த குரங்கைப் பிடித்து அதனை அடித்து துன்புறுத்தி, கொன்று எரித்து விட்டதாக மருத்துவ மாணவர்கள் 4 பேர் மீது புகார் கூறப்பட்டு, எப்.ஐ.ஆரும் போடப்பட்டது. மாணவர்கள் நால்வரை இடைநீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரி மாணவர்கள் விடுதி அருகே பெண் குரங்கு ஒன்று கடந்த 19-ஆம் தேதி அலைந்து திரிந்து கொண்டிருந்தது.  இதை மருத்துவ மாணவர்கள் 4 பேர், விடுதியில் இருந்த பெட்சீட் ஒன்றில் பிடித்து குரங்கின் கை, கால்களை கட்டி துன்புறுத்தி உள்ளனர். சக மாணவர்கள் முன்னால் குரங்கை அடித்து துன்புறுத்திய மாணவர்கள் 4 பேர், தங்களிடம் இருந்த குச்சி, பெல்ட் ஆகியவற்றால் குரங்கை அடித்து துன்புறுத்தியுள்ளனர். எல்லாவற்றுக்கு மேல் குரங்கின் ஆசன வாயில் கம்பை விட்டு துன்புறுத்தி கொன்றுள்ளனர். அதன் பிறகு எரித்து உடலை மாணவர் விடுதி மெஸ்ஸின் பின்புறம் உள்ள இடத்தில் புதைத்துள்ளனர்.

சக மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த கொடூர சம்பவம் வெளியே தெரியவர, மாணவர்களில் சிலர் விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விலங்கின் ஆர்வலர்கள் ஏலும்பாக்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலாளர்கள், குரங்கின் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இதில் தொடர்புடைய 4 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குரங்கை அடித்து கொடூரமாக கொன்று எரித்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ சேவையை மக்களுக்காக செய்து, உயிர்நீத்த 20 ரூபா டாக்டரை கடவுளைப் போல பார்க்கின்றனர் மக்கள்.

அனைத்து மருத்துவர்களையும் கடவுளாக பணியாற்றவில்லை எனட்ராலும் பரவாயில்லை, பிற உயிர்களை துன்புறுத்தி இரசிக்கும் கொரூர குணமுள்ளவர்களாக இருக்க வேண்டாமே…

PREV
click me!

Recommended Stories

குடும்பங்களை சீரழிப்பதில் சாதனை படைத்த திமுக அரசு...! 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை.. அன்புமணி
ராமதாஸ் தான் தலைவர்... அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல - பாமக சட்ட ஆலோசகர்