
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு பதற்றம் நிலவுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார்தடியடி நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் காவல் வாகனத்தை கவிழ்த்தும், கல்லெறிந்தும் நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர்.
போதிய காவலர்கள் இல்லாத்தால் போராட்ட்த்தை கட்டுப்படுத்த போலீஸார் திணறி வந்த்னர், கண்ணீர் குண்டு வீசியும் வஜ்ரா வாகனத்தையும் போராட்டக்கார்ர்கள் விரட்டி அடித்தனர்.
இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். அவரது நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளது.
பலர் படுகாயம் அடைந்துள்ளனர்