திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரி மற்றும் டிராக்டர் பறிமுதல்; ஓட்டுநர்கள் அதிரடி கைது...

 
Published : Jan 24, 2018, 09:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரி மற்றும் டிராக்டர் பறிமுதல்; ஓட்டுநர்கள் அதிரடி கைது...

சுருக்கம்

Stealth sand lorry and tractor seized and drivers arrested

திருவாரூர்

திருவாரூரில் உரிய அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரி மற்றும் டிராக்டரை காவலாளர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். ஓட்டுநர்கள் இருவரையும் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம்  காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையிலான காவலாளர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வெண்ணாற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரி மற்றும் டிராக்டரை நிறுத்தச் சொல்லி அதனை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, லாரி மற்றும் டிராக்டரில் உரிய அனுமதியின்றி திருட்டுத்தனமாக வெண்ணாற்றிலிருந்து மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

அதனையடுத்து, லாரி மற்றும் டிராக்டரை காவலாளர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும், லாரி ஓட்டுநர் பூவனூர்தட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏசுராஜ் (33) , டிராக்டர் ஓட்டுநர் அனுமந்தபுரத்தைச் சேர்ந்த  திவாகர் (33) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மணளை எங்கே எடுத்து செல்கின்றனர்? மணல் திருட்டில் வேறு யாராவது சம்பந்தப்பட்டு உள்ளனரா? என்று அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

காங்கிரஸ்க்கு கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்..? போனிலேயே நடந்து முடிந்த டீல்.. கலக்கத்தில் திமுக
அதிமுக விருப்ப மனுவுக்கு ரூ 18 லட்சம் பணம் கட்டிய நபர்..! 120 தொகுதிகளில் எடப்பாடி போட்டியிட மனு