கூவத்தூர் எம்.எல்.ஏ பேர விவகாரம் - ஸ்டாலின் கூடுதல் மனு தள்ளுபடி!

 
Published : Jun 29, 2017, 01:48 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
கூவத்தூர் எம்.எல்.ஏ பேர விவகாரம் - ஸ்டாலின் கூடுதல் மனு தள்ளுபடி!

சுருக்கம்

stalin petition refused in HC

கூவத்தூர் எம்.எல்.ஏக்கள் பேர விவகாரத்தில் கேசட் வெளியானதை ஒட்டி சி.பி.விசாரணை மற்றும் வருவாய் புலானாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட கேட்டு ஸ்டாலின் தாக்கல் செய்த கூடுதல் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கூவத்தூர் பேர விவகாரம் குறித்து மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் சூளூர் எம்.எல்.ஏ கனகராஜ் ஆகியோர் பேசிய கேசட் வெளியானது. இது பற்றி வந்த ஆதாரங்கள் அடிப்படையில் சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க ஸ்டாலின் ஏற்கனவே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய கேட்டிருந்த வழக்கில் கூடுதல் மனுவாக தாக்கல் செய்திருந்தார்.

அதில் பணப்பரிமாற்றம் குறித்து தொலைக்காட்சியில் வந்த ஆதாரத்தின் அடிப்படையில்  கோடிக்கணக்கான ரூபாய்  பணம் மற்றும் தங்க நகைகள் கொடுக்கப்பட்டதாக வெளியாகி உள்ளதால் சிபிஐ மற்றும் வருவாய் புலானாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பவானி சுப்பராயன் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த கூடுதல் மனுவுக்கும் மூல வழக்குக்கும் சம்பந்தமில்லை , மூல வழக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என போடப்பட்டது. அது சட்டமன்ற உரிமை குழு சம்பந்தப்பட்ட வழக்கு அதில் வெளியில் உள்ள விபரங்களை இணைக்க முடியாது. சிபிஐ விசாரணை கேட்பது தனி விவகாரம் என்று கூறினார். கூடுதல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கூடுதல் மனுவை தள்ளுபடி செய்தனர். எங்கள் முறையீட்டை எங்கு செய்ய எங்களுக்கு உள்ள உரிமை என்ன என கேள்வி எழுப்பினார். நீங்கள் சம்பந்தப்பட்ட சிபிஐ , வருவாய் புலானய்வு அமைப்பிடம் புகார் தெரிவியுங்கள் , சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களை அணுகுங்கள் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!