டீசல் எலக்ட்ரிக்கல் ஷெட்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாதாம் எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

 
Published : Jan 31, 2018, 08:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
டீசல் எலக்ட்ரிக்கல் ஷெட்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாதாம் எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

srmu trade unions demonstrated for various demands like Diesel Electric Sheet should not privatised

கடலூர்

டீசல் எலக்ட்ரிக்கல் ஷெட்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கடலூர்  மாவட்டம், விருத்தாசலம் இரயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தினர் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு கோட்டச் செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். வீரகுமார், கணேஷ்குமார், சிலம்பரசன், மகாலட்சுமி, ராஜேந்திரன், தீபலட்சுமி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "புதிய பென்‌ஷன் திட்டத்தை உறுதி செய்யப்பட்ட பென்‌ஷன் திட்டமாக மாற்றி அமைக்க வேண்டும்.

தரத்திற்கு ஏற்ற பதவி உயர்வு வழங்க வேண்டும்.

டீசல் எலக்ட்ரிக்கல் ஷெட்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது,

அனைத்துப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தினர்  அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!