‘மீட்டருக்கு மேல டப்பு தரலன்னா இதான் நடக்கும்’ பணம் கொடுப்பதில் தகராறு – தந்தை, மகனுக்கு ‘ஸ்குரு டிரைவர்’ குத்து

 
Published : Oct 15, 2016, 01:50 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
‘மீட்டருக்கு மேல டப்பு தரலன்னா இதான் நடக்கும்’ பணம் கொடுப்பதில் தகராறு – தந்தை, மகனுக்கு ‘ஸ்குரு டிரைவர்’ குத்து

சுருக்கம்

மீட்டருக்கு மேல் பணம் கொடுக்கததால், தந்தை மற்றும் மகனை ஸ்குரு டிரைவரால் குத்திவிட்டு, ஆட்டோ டிரைவர் தப்பினார்.

சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரை சேர்ந்தவர் வேலு (52). இவரது மகன் சுரேஷ் (30). தனியார் கம்பெனி ஊழியர்கள். பாரிமுனையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இருவரும் வேலை முடிந்து, தங்கச்சாலையில் இருந்து ஷேர் மூலம் வியாசர்பாடி சென்றனர். சத்தியமூர்த்தி நகரில் இறங்கியதும், தலா ரூ.10 கொடுத்தனர். அதற்கு ஷேர் ஆட்டோ டிரைவர், தலா ரூ.20 தரவேண்டும் என கேட்டுள்ளார். இதனல், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், வாகனத்தில் இருந்த பெரிய ஸ்குரு டிரைவரை எடுத்து, வேலுவின் கழுத்தில் குத்தினார். இதை தடுக்க வந்த அவரது மகன் சுரேஷின் வயிற்றில் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பினார்.

படுகாயமடைந்து அலறி துடித்த 2 பேரையும், அப்பகுதி மக்கள், மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புகாரின்பேரில் வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஷேர்ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!
ஜனவரி 7ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு