தமிழர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வீடியோ வெளியிட்ட நபர் யார்.? பெயரை வெளியிட்டு தனிப்படை அமைத்த டிஜிபி

By Ajmal Khan  |  First Published Sep 28, 2023, 9:04 AM IST

பதற்றத்தை விளைவிக்கும் வகையில் பொய் செய்திகளை பரப்பும் நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கர்நாடகாவில் போராட்டம்

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பழைய வீடியோக்களை தற்போது வெளியிட்டு பதற்றத்தை உருவாக்கிய இரண்டு நபர்களை படிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், மாண்புமிகு உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்குறிய ;நீர் திறந்து விடப்பட்டுள்ளதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் சில அமைப்புகள் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,

Tap to resize

Latest Videos

இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாரி ஓட்டுனர் தாக்கப்பட்ட படங்களை தற்போது நடைபெறுவதாக மதுரை மாவட்டம், கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சீமான் என்பவரும், நெல்லையை சேர்ந்த நெல்லை செல்வின் என்பவரும் தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

பழைய வீடியோவால் பதற்றம்

மேற்படி நபர்கள் இந்திய நாட்டின் இறையாளர்மைக்கும் தேச ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்கிற குற்றமுறு நோக்கில் கர்நாடகாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக தவறாக முகநூலில் பதிவிட்டும் அதை சமூக வலைதளங்களில் பரவ விட்டும் மாற்று மாநிலத்தவரை அச்சம் கொள்ள செய்து, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், தேச ஒற்றுமைக்கு அச்சறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டுள்ளனர்.

எனவே, மதுரை மாவட்ட காவல் துறை தாமாக முன்வந்து மது 2/2 கருப்பாயூரணியை சேர்ந்த தங்கராஜ் மகன் சீமான என்பவர் மீதுமேற்படி குற்றவாள்.. மீது மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண்: 23/2023, பிரிவு: 153, 153A, 504, 505 (1) (b), 505 (2) IPC & 67/17 Amendment Act 2008 ன்படி வழக்கு பதிவு செய்துள்ளது.

தனிப்படை அமைத்த போலீஸ்

அதேபோல் நெல்லையை சேர்ந்த செல்வின் என்பவர் மீதுதிருநெல்வேலி டவுண், மாதா பூங்கொடி தெருவைச் சேர்ந்த பிச்சுமணி மகன் விக்னேஷ்வரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல்நிலைய குற்ற எண். 1112/23 பிரிவு 153, 153A, 505(1) IPC-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி எதிரிகளை பிடிப்பதற்க்கு தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்களை விரைவில் கைது செய்து சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் இது போன்று பதற்றத்தை விளைவிக்கும் வகையில் பொய் செய்திகளை பரப்பும் நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!