
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு எழுத நடவடிக்க எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை புது கல்லூரியில் மாநில அளவிலான சிலம்ப போட்டியை பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நமது விளையாட்டுத்துறையில் சிலம்ப போட்டிக்கு 3 சதவித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிலம்பத்தின் வரலாற்றை அறிய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சிகளை முதலமைச்சர் மேற்கொண்டுவருவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் அரசுப் பள்ளிகளில் 5 வயதை கடந்த மாணவர்களின் சேர்க்கை வழக்கம் போல் நடைபெற்று வருவதாக கூறிய அவர், பள்ளிகள் திறக்கும் போது மாணவர்கள் முக கவசம் அணிவது உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வரும் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகள் படி பின்பற்றப்படும் என்றார். தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதில் நிகழ் கல்வியாண்டில் சுமார் 6.70 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு வருகை தாராதது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக விளக்கினார். மேலும் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்குசிறப்பு தேர்வு நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
மேலும் படிக்க: காலை 8 மணிக்கு மேல் ஆவின் பால் கிடைப்பதில்லை...? கூடுதல் விலைக்கு பால் வாங்க பொதுமக்களுக்கு அழுத்தம்- ஓபிஎஸ்