
கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தங்கள் மனம் கவர்ந்த தலைவரின் படம் திரையில் வெளியாகும் தினம் தான் ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல், அன்றைய தினத்தில் திரையரங்கை அலங்காரம் செய்து தங்கள் தலைவர்களின் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடுவார்கள். ரஜினி, கமல்,விஜய், அஜித் என முன்னனி நடிகர்களின் படம் வெளியாகிறது என்றால் கேட்கவே வேண்டாம், அன்றைய தினம் ஒட்டுமொத்த தமிழகமும் திரையரங்கில் கூடி கொண்டாடி மகிழ்வார்கள் அப்போது பல அடி உயரமுள்ள கட் அவுட்டில் ஏறி தங்கள் தலைவர்கள் படங்களின் மீது பல லிட்டர் பாலை ஊற்றி கொண்டாடி மகிழ்வார்கள். கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருந்தாலும் கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் உயிரை பணயம் வைத்து கொண்டாடுவார்கள் இதற்கு பல்வேறு நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் போது கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யாமல் பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கி அஜித் ரசிகர்கள் அசத்தியிருந்தனர்.
கமல் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம்
இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்கில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில் பல திரையரங்கிற்கு முன்பு கமல் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் ரசிகர்கள் ஒருபடி மேல சென்று கமலின் பல அடி உயரமுள்ள கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். இதற்கு பால் முகர்வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிகையில், மாற்றம் முதலில் நம்மிடமிருந்தே துவங்கப்பட வேண்டுமென்பதே நம்மவர் கமல்ஹாசன் அவர்களின் விருப்பம் என்பதை விட எண்ணம் என்று கூட சொல்லலாம் அதனால் தான் ரத்ததானம்,உடல்உறுப்புதானம் நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லி கை காட்டாமல் தானே அதனை செய்து காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். . கமல்ஹாசன் அவர்களின் ரசிகர்கள் என்றால் வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல, அவர்கள் நற்பணி நாயகர்கள் எனும் எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக நிலைத்திருக்கும் தருணத்தில் அவருக்கு நூறடிக்கும் மேலான கட்அவுட் வைத்து கரணம் தப்பினால் மரணம் என்கிற ஆபத்தான நிலையில் அதன் மீதேறி அந்த கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வது நம்மவருக்கு செய்யும் அவமானமாகும் என தெரிவித்துள்ளார்.
பால் முகர்வர்கள் எதிர்ப்பு
நூறடிக்கும் மேலான அவ்வளவு பெரிய கட் அவுட் மீதேறி பாலாபிஷேகம் செய்கின்ற ரசிகர்களில் ஒருவேளை எவரேனும் தவறி விழுந்து அசம்பாவிதங்கள் நடந்திருந்தால் அது நம்மவரின் நற்பெயருக்கும், விக்ரம் திரைப்படத்தின் அபார வெற்றிக்கும் எவ்வளவு பெரிய இழுக்கை ஏற்படுத்தியிருக்கும்..? மற்ற நடிகர்களின் ரசிகர்கள் போல கலைஞானி திரு. கமல்ஹாசன் அவர்களின் ரசிகர்கள் கிடையாது எனும் போது பிறரை ரசிகர்களைப் போல கட் அவுட் கலாச்சாரத்தை நம்மவரின் ரசிகர்களும் பின்பற்றுவது ஏற்புடையதல்ல. அதே சமயம் நான்காண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வந்திருக்கும் நம்மவரின் #விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக் கொண்டாடட்டத்தை மாற்றத்திற்கான அரசியல் களமாக பயன்படுத்தி மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சிக்கு உபயோகத்திருந்தால் நம்மவரே சம்பந்தப்பட்ட ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டியிருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை என சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்